ஒரு டொலரும் சிவத்த உண்டியலும் editorial

 

நவஜீவன் அனந்தராஜ்

உங்கள் ஒவ்வொருவருக்கும் “உண்டியல்” என்னும் சொல் தரக்கூடிய உளவியல் தாக்கத்தை நாம் நன்கு அறிவோம். அதேபோல் இலவச ஊடகமாகப் பயணிப்பது என்பதும் உளவியல் தாக்கம் மிகுந்தது. இதனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாத இகுருவி ஆண்டு விருது விழாவில் இகுருவி பத்திரிகையை இனி வருங்காலங்களில் ஒரு டொலருக்கு விற்பனை செய்து அதில் வரும் முழு வருமானமும் எங்களால் நடத்தப்படும் “புதிய வெளிச்சம்” செயற்பாட்டு  வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தோம்.

வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையோடு பல்லாயிரம் டொலர்களை விடுதலையின் உண்டியல் பணமாக  வித்திட்ட மக்கள் நீங்கள்.  எதிர்பார்த்திராத முடிவு வந்தடைந்த பின்பும் வலுவான சமூகமாக புலத்தில் தடம் பதிக்கும் உங்களுக்கு மீண்டும் உண்டியலா என உள்ளுணர்வு உறுத்தலாம். ஒரு பிறவிப்பாளன்  இடத்தில் இருந்து பார்க்கும் போது நாம் எடுத்துக் கொண்ட முடிவு கனதியாக இருந்தாலும் சரியான முடிவென்பதில் தெளிவாக உள்ளோம்.

இத்தனை இலவச பத்திரிகைகளுக்குள் காசு பத்திரிகை சாத்தியமா? உண்டியலுக்குள் பணம் போடாமல் பத்திரிகையை எடுத்துச் சென்றால் என்ன செய்வீர்கள்? போன்ற கேள்விகள் எம்மை நோக்கி வந்த வண்ணமே உள்ளன. இதற்கு எங்களிடம் ஒரே பதில் தான் உண்டு அந்தப் பதில்…….   நம்பிக்கை தான் வாழ்க்கை.

எங்களின் வாசகர்கள் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் எமக்கு அதீத நம்பிக்கையுண்டு. உங்களின் ஆதரவும் அனுசரணையும் இருந்ததால் மட்டுமே இகுருவி என்பது உங்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஓர் தலைசிறந்த தமிழ் ஊடகமாக இன்று உயர் நிலையில் உள்ளது.

34720367_10160406516930557_530759392581124096_nஅதேபோல் புலத்தில் எங்கள் சமூகம் மீது இருக்கிற புரிதலைப் போல், களத்தில் இருக்கின்ற எங்கள் மக்கள் மீதும் எங்களுக்கு அளப்பரிய கரிசனை உண்டு.  போர் என்னும் போட்டியில் துரதிஷ்டவசமாக  பலவற்றை இழந்து நிற்கின்ற மக்களை கடை நிலையில் நிறுத்திவிட்டு எங்களால் முன்னேறிச்செல்ல முடியாமல் இருக்கிறது. அவர்களை வாழ்வாதாரத்திற்கு  பணம்,  சிந்தனை , பங்கெடுத்தல் என்னும் பல்வேறு காரணிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.  இத்தேவைகளில் முக்கியமாகத் தேவைப்படுவது பணம். இப்பணத்தை பெறுவதற்காக பத்தோடு பதினொன்றாய் நாங்களும் உங்கள் படலைகள் தேடிவர விரும்பவில்லை. விளைவு இகுருவியை விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில் எங்கள் பணியைத் தொடர்வதற்கு உறுதி பூண்டுள்ளோம்.

நீங்கள் பத்ரிகைக்காக கொடுக்கும் ஒவ்வொரு டொலர் அன்பளிப்புக்கும்  அங்கு பல கல்வி , பொருளாதார , செயற்பாடுகளை செய்யலாம் என்று நம்புகின்றோம்

  • புதிய வெளிச்சம் நிச்சயமாக சரியான பாதையில் பயணிக்கின்றது, கடந்த இரண்டு  ஆண்களாக  அதன் பணிகளையும், அது பயணிக்கும் பாதைகளையும் நீங்கள் அறிவீர்கள். இனி உங்களின் ஒவ்வொரு டொலரும் பல புதிய வெளிச்சங்களுக்கு விதைகளாக உருவெடுக்கும்.

ஒன்று படுவோம்!  ஒரு டொலரில் ஓராயிரம் செய்வோம்!!.

நவஜீவன் அனந்தராஜ்

 

வாழ்த்துச்செய்தி

அவர் நற்பணி செய்து நிரூபித்ததால் நம்பி உங்கள் பங்களிப்பை செய்யலாம்

35050973_10160415504490557_4947146341751980032_oஈக்குருவி இரவு ஆரம்பித்த முதல் வருடம் நீயா நானா புகழ் கோபிநாத்தை கொண்டு வந்தபோது இது வியாபார நொக்குடனான ஒரு ஏற்பாடாகத்தான் பார்த்தேன். ஆனால் கடந்த சில வருடங்களாக நவஜீவன் தாயகத்தில் செய்து வரும் செயற்பாடுகளை கவனித்தபோதுதான் அவர் எம் தாய்மண்மீதும் மக்கள் மீதும் எவ்வளவு பற்று வைத்திருக்கின்றார் என்பது புரிந்தது. ஆன்றிலிருந்து அவர் செயற்திட்டங்களுக்கு கூடியளவு உறுதுணையாக இருக்க வேண்டுமென முடிவு செய்தேன். அவருக்கு ஒரு சிலர் நிதி வழங்கி உதவினாலும் நிச்சயமாக அவரின் கையால் கணிசமான தொகை செலவிடப்படுவது தவிர்க்க முடியாததே. தனது நேரத்தையும் உழைப்பையும் ஒருவர் தாய்நாட்டுக்காக அர்ப்பணிக்கும்போது அவரிடமிருந்து பணத்தையும் எதிர்பார்ப்பது சரியானதல்ல. அங்கு போய் செயல்திட்டங்களை ஆற்ற முடியாதவர்கள் நிதியை வழங்கலாம். அதுவும் பெரும் தொகையல்ல. ஒரு டொலர்தான். ஊர்கூடி தேர் இழுப்பதுபோல ஒவ்வொருஈழத்தமிழனும் பங்களித்தால் சிறு துளி பெரு வெள்ளமாகும். அதையும் அவர் இனாமாக கேட்கவில்லை. புல கட்டுரைகளை தாங்கி வரும் பத்திரிகையை வாசிக்கவிரும்புபவர் ஒரு டொலரை உண்டியலில் போடவேண்டும்.  உண்டியல் என்றவுடன் எல்லோருக்கும் ஒரு கணம் உறைக்கும் ஆனால் அவர் நற்பணி செய்து நிரூபித்ததால் நம்பி உங்கள் பங்களிப்பை செய்யலாம். அது இனிமேல் நடைபெற இருக்கும் செயற்திட்டங்களுக்கு வலுச் சேர்க்கும்.

வைரமுத்து சொர்ணலிங்கம்

 

கொடுப்பதிலும் ஓர் இன்பம் இருக்கின்றது

தாயக உறவுகளின் நன்மை கருதி கனடிய மண்ணில் இருந்து சேவையாற்றும் இகுருவி பத்திரிகையின் வளர்ச்சி இக்கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது. இகுருவி பத்திரிகையானது பொருளாதார வளர்ச்சியில் ஓரளவு நிறைவு கண்டால்தான் தாயக மக்களுக்குத் தொடர்ந்தும் அதனால் உதவ முடியும். இதுவரை காலமும் இலவசமாகக் கிடைத்த இகுருவி பத்திரிகை தனது வாசகர்களிடம் இருந்து சிறிய அன்பளிப்பை எதிர்பார்ப்பதற்குக் காரணம் அதில் கிடைக்கும் நிதி உதவியைத் தாயக மக்களுக்காகத் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற சிறந்த நோக்கமேயாகும். இதுபோன்ற தன்னலமற்ற சேவைகள் தொடர வேண்டுமானால் பொருளாதார வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அன்பளிப்பு மூலம் கிடைக்கும் நிதி வசதிகளைக் கொண்டுதான் எதிர்கால சேவைகளை இகுருவியால் நிர்ணயிக்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களின் தேவை அறிந்து அதை ஓரளவாவது நிறைவேற்ற முடியும். சிறுதுளி பெருவெள்ளம் போல நீங்கள் இகுருவி பத்திரிகைக்காகக் கொடுக்கும் ஒவ்வொரு டொலரும் தாயகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட யாரோ ஒருவருக்கோ அல்லது ஒருவரின் குடும்பத்திற்கோ ஏதோ ஒருவகையில் சென்றடையும். கொடுப்பதிலும் ஓர் இன்பம் இருக்கின்றது. அதைக் கொடுத்துப் பார்த்தால்தான் உணரமுடியும்.

‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

வைத்து இழக்கும் வன்க ணவர்’ (குறள் 228)

ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டது போல ‘நம்பிக்கைதான் வாழ்க்கை’ என்பதைத் தாரக மந்திரமாக எடுத்து தாயகத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எம்மால் முடிந்தளவு உதவுவோம்.

அன்புடன்

குரு அரவிந்தன்.

 

ஊர்கூடி தேர் இழுக்க உந்து  சக்தியாக உள்ளது

வாழ்த்து  …..வணக்கம்

நவஜீவன் மற்றும்  ஈகுருவி குழு செயற்ட்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் கடந்தகாலங்களில் சிறப்பானதாகவும் நேர்தியானதாகவும் இருந்ததை ஆரம்பம் முதல் இன்றுவரை அவதானித்து வருகிறேன்.நாம் வைத்த  நம்பிக்கை தொடர்ந்தும் உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது .அந்த வகையில் தனி ஒருவனாக எப்படி இதை சாதிப்பார் என்று நான் நினைத்த பலவற்றை தன்னோடு பலரை இணைத்து சாதித்து காட்டிய நவஜீவனின் ஆளுமையை நான் மட்டுமல்ல புலம்பெயர் கனேடிய தமிழர்களும் ,தாயக மக்களும் நன்கு அறிவார்கள்.அந்தவகையில் விழுதுகளை வேர்களோடு இணைக்கும் இப்பணியையும் நம்பிக்கையுடன் பயணித்து நிறைவேற்ற என் மனமார்ந்த வாழ்த்துகள் .

“ஊர்கூடி தேர் இழுக்க உந்து  சக்தியாக உள்ள e-குருவிக்கும் வாசகர்களுக்கும் நன்றி பல

S.J. ராம் பிரஷன்

34860798_1894868817238614_5531039650925248512_o 34877102_1894868263905336_1819118262756048896_o 34904598_1894867540572075_5139813360560242688_o 34962930_1894867640572065_6150680900616060928_o 35026666_1894868030572026_6703691144368226304_o 35050027_1894868417238654_3404012683047993344_o 35050973_10160415504490557_4947146341751980032_o 35054397_1894869673905195_715472969475817472_o 35058139_1894869377238558_8797249274648723456_o 35069606_1894869227238573_3943685163560468480_o 35077450_10160415504795557_1238112262527385600_n 35080989_1894869827238513_6088761976312299520_o 35082713_1894868333905329_2023707526662455296_o 35142964_10160415504925557_6313984851519209472_n 35151706_10160415504590557_1007231936139100160_o 34877102_1894868263905336_1819118262756048896_o - Copy 34720367_10160406516930557_530759392581124096_n - Copy 34815544_1894367243955438_8541720856798167040_n - Copy 34829434_1894869647238531_7401269935764144128_o - Copy   34875769_1894869897238506_7376469931308613632_o - Copy