நேசிக்க கற்றுக்கொண்டுள்ளார் , உலகம் அவரை நேசிக்கும்


இகுருவி ஐயா தனது விடுமுறையை முடித்துக்கொண்டு 10 ஒக்டொபர் 2019 நாடு திரும்பினார் .

குருவி கிழவன் டொரோண்டோ விமான நிலையத்தில் இருந்து வரும் போது தாயக நிலவரங்களை சொல்லிக்கொண்டே போனார் .இடையில வேற இங்க என்ன புதினம் என்று வேற கேட்டார் . இங்க என்னத்த சொல்ல ..

மனுஷன் .. இந்த முறை இகுருவி விருது வாங்கிய ஆறு திருமுருகன் ஐயாவின் திருவாசக அரண்மனை முதல் தெல்லிப்பளை அம்மன் தேர் , ஆளுநர் சுரேன் ராகவன் , எழுக தமிழ் ஊர்வலம் , திலீபன் நினைவுநாள் அஞ்சலி , செல்வசந்நிதி திருவிழா , ஒரு கிழமை வல்வெடித்துறையில் என்ற அம்மாவின் சாப்பாடு , ஐபிசி பாஸ்கரனின் இயற்கை விவசாய பண்ணையும் நூற்றுக் கணக்கானவருக்கு வேலைவாய்ப்பும் , புதிய வெளிச்சம் உருவாக்கிய “இயற்கை விவசாய இயக்கம் ” , வசீகரனின் மாகோசா விடுதி , அவர் உற்பத்தி செய்யும் இயற்கை முறை முருங்கை தோட்டம் , கிளிநொச்சியில் ஐயாவின் சகோதரியுடன் சில நாள் , அவரது சொந்த ஊரான நெடுந்தீவாரோடு சில

நாள் , நண்பனின் மகளின் திருமணம் ,, யாழ் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சந்திப்பு ,யாழ்ப்பாணத்தின் விவசாயக் கண்காட்சி, நெடுந்தீவு குதிரையும் பாறை கல் வேலியும் , தாய் மண்ணில் பறப்பன முதல் ஊர்வன எல்லாத்தோடும் ஒரு நாடோடியாக திரிந்திருக்கின்ற்றார் தனது ஆயிரக்கணக்கான அவரது புகைப்பட இகுருவி விசிறிகளையும் சந்தித்துதான் வந்துள்ளார் .

இதுமட்டுமா இகுருவி விருது பெற்ற குணசீலன் ஆசிரியரோடு சில நாள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிகழ்வில் , எழுத்தாளர் நிலாந்தனோடு ஒரு நாள் , இகுருவி இம்முறை விருது பெற்ற குவேந்திர நாதன் ஐயாவின் புதிய வீட்டு திட்ட திறப்புவிழாவில் மற்றும் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ,மெதடிஸ் கல்லூரியும் , 1930 ஆண்டு முதல் இயங்கும் குகன் ஸ்டுடியோ ,
யாழ்ப்பாணத்தில் குருநகரில் யாழ் புகைப்பட பிடிப்பாளர்களின் ஒரு நாள் களபயிற்சியில் ,ஐபிசி மற்றும் டெக்னோ மீடியா மதன் வழங்கிய வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் மூன்று நாள் பங்கு பற்றியது , யாழ்ப்பாணத்திலிருக்கின்ற மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ,சவால்களையும் ,ஒடுக்குமுறைகளையும் ,ஒதுக்கல்களையும் ”நாங்களும் இருக்கிறம்”என்ற நிகழ்வை பதிவாக்கியது .கவிஞர் சோ. ப அவர்களின் 80 ஆவது அகவை விழா என்று சுமார் 10 மேற்பட்ட நிகழ்வுகளை பதிவுசெய்திருக்கின்றார் .

மேலும் ,தமிழ் CNN அகிலனும் அவரது பண்ணை பாலத்தில் கடற்கரையுடன் அமைந்துள்ள லவ்லி ஐஸ் கிரீம் கடையும் எக்ஸ்ட்ராவா சுவைத்தார் .
“அகிலன் சூப்பர் உழைப்பாளி என்றும் , மீடியாவை விட நல்லா அதுதான் அவருக்கு சரி என்றும் சொன்னார் “. கிளிநொச்சியில் எம்பி ஸ்ரீதரன் திருமண வீட்டில் கண்டு வரச்சொன்னதையும் சொன்னார்

குருவி கிழவன் 15 கிலோ கமராவை தூக்கி கொண்டு எம் தேசம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான் பூக்களை ஒன்றுவிடாமல் படமெடுத்திருக்கின்றார் .

அது மட்டுமா இடையில பாழாப்போன ஸ்ரீலங்காவின் இன்டர்நெட் டை
உலகிலேயே பாழாப்போன இன்டர்நெட் என்று திட்டு வேற

கடைசியா மனுசன் ஜெயவர்த்தன புர் பல்கலைக்கழக்த்தில் பயிலும் மருத்துவ பீட மாணவனுக்கு ஒரு வருடத்துக்கான தங்குமிட வசதிக்கு 50,000 ரூபா கட்டிவிட்டும் , வேலையில்லா கூலி தொழிலாளிக்கு மரம் வெட்டும் வாள் 20,000 ரூபாவுக்கு வாங்கி கொடுத்து விட்டுத்தான் வந்துள்ளார் .

குருவியார் இந்த வருடம் மட்டுமல்ல கடந்த பத்து வருடமா தாயகத்துக்கு போய் ஊரோடு விளையாடிவிட்டுத்தான் வருகின்றார்.

இந்த கொடுப்பினை அவருக்கும் இருக்கு .. அந்த தாய் மண்ணுக்கும் இருக்கு

அவர் தன்னை பந்தா இல்லாமல் நேசிக்க கற்றுக்கொண்டுள்ளார் , உலகம் அவரை நேசிக்கும்
நவஜீவன் அனந்தராஜ்
(facebook இல் எழுதியது )