இயற்கை விவசாய வாரம் 2020 ஜனவரி 08 – 14

இயற்கை விவசாய வாரம் 2020 ஜனவரி 08 – 14

கீழே நடைபெறும் பிரதான நிகழ்வுகள் உற்பட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு பாடசாலைகள், ஊர்ச்சங்கங்கள் பண்ணைகளில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்க  ஊடகங்களின் ஒத்துழைப்பு வேண்டிநிக்கின்றோம்

💚JAN 8
இயற்கைவழி அங்காடி ஆரம்பமும் கலந்துரையாடலும்

இயற்கை விவசாய வாரம் 2020 இன் முதல் நாள் சிறப்பு நிகழ்வாக “அங்காடி ஆரம்பமும் கலந்துரையாடலும்” ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா கிரீன் விடுதியில் இடம்பெறவுள்ளது. இயற்கைவழிச் செயற்பாட்டாளர்கள், விவசாயிகள், சூழலியல் ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம். மேலதிக விபரங்களை அறிய 075 973 2169 அல்லது 077 378 8795

💚JAN 9
இலைக்கஞ்சியுடன் ஒரு மாலைப்பொழுது

இயற்கைவழி விவசாயமே பயிர்களின் நலத்தையும் உயிர்களின் நலத்தையும் பேணிக்காக்கவல்லது. யாழ்ப்பாண நகரிலே இலைக்கஞ்சி போன்ற எங்கள் கலாச்சாரத்துக்கு ஒத்திசைவான ஆரோக்கிய உணவுகளைப் பெறக்கூடிய ஒரே இடம் “அல்லை விவசாயி” ஆரோக்கிய உணவகமாகும். இந்த ஆரோக்கிய உணவகத்தினை ஆரம்பித்து நடத்திவரும் அல்லைப்பிட்டியை சேர்ந்த ம.கிரிசன் மற்றும் ஏனைய இயற்கைநல ஆர்வலர்களுடன் ஓர் மாலைபொழுதில் உரையாடுவோம் வாரீர். தொடர்பிலக்கம்: 077 621 9086

💚JAN 10
பண்ணைப் பயில்களம் | மண்புழு வளர்ப்பு

மூத்த இயற்கைவழிச் செயற்பாட்டாளர் திரு. சிவநேசன் அவர்களுடைய நெறிப்படுத்தலில் மண்புழு வளர்ப்புத் தொடர்பான பண்ணைப் பயில்களம் வெள்ளிக்கிழமை (10/01/2020) அன்று மாலை 3:00 மணிமுதல் 5 மணிவரை இடம்பெறவுள்ளது. உங்கள் வீட்டில் மண்புழு வளர்ப்பினை மேற்கொள்வதன் மூலம் நீங்களாகவே இயற்கை உரத்தினை உற்பத்தி செய்து நஞ்சற்ற காய்கறிகளை வீட்டுத்தோட்டத்திலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். மேலதிக விபரங்களை அறிய அழையுங்கள் திரு. சிவநேசன் 077 853 2105

💚JAN 11
காளான் வளர்ப்பைக் கற்றுத் தெளிவோம்

புரதச் சத்து மிகுந்த காளானை வீட்டில் வளர்த்தால் நமக்கும் ஆரோக்கியமான உணவாக அமைவதோடு மேலதிக வருமானம் தரும் உபரித்தொழிலாகவும் அமையும். காளான் வளர்ப்பினை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் மகரிஷி காளான் உற்பத்தி நிலையத்திற்கு சனிக்கிழமை (11/01/2020) மாலை 3:30 மணிக்கு நேரில் சென்று காளான் வளர்ப்பு தொடர்பான விடயங்களைக் கற்றுக்கொள்வோம். காளான் வளர்ப்பில் ஆர்வமுள்ள அனைத்து இயற்கைவழிச் செயற்பாட்டாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு 077 704 0979 அல்லது 075 974 3993

💚JAN 12
தற்சார்பும் இயற்கைவழி விவசாயமும் | கலந்தாய்வு

யாழ்நகர மத்தியில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்புச் சந்தையாகிய யாழ்முற்றத்தில் “தற்சார்பும் இயற்கைவழி விவசாயமும்” என்ற தலைப்பில் 12/01/2020 அன்று மாலை 3 மணிமுதல் 5 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் இயற்கைவழி இயக்கத்தினரின் கலந்தாய்வு இடம்பெறவுள்ளது. அனைத்து சூழல் நேயர்கள், இயற்கைநல ஆர்வலர்களையும் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேலதிக விபரங்களை அறிய 077 776 9751

💚JAN 13
களப்பயணம் | Nature Fresh Agri பண்ணை

ஊரெழுவில் அமைந்துள்ள பண்ணைக்கு திங்கட்கிழமை (13/01/2020) அன்று மாலை 3 மணிக்கு களப்பயணம் ஒன்றினைத் திட்டமிட்டுள்ளோம். இப் பண்ணையின் நிறுவுனர். பிரசாந் அவர்களின் அனுபவப் பகிர்வும் இயற்கைப் பூச்சிவிரட்டிக் கரைசல்கள் எவ்வாறு பயிர் நலத்தையும் உயிர்களின் நலத்தையும் ஒருங்குசேரக் காக்கின்றன என்பது பற்றிய உரையாடலும் இடம்பெறும். மேலதிக விபரங்களை அறிய 077 249 9789

💚 JAN 14

இயற்கை விவசாய பொங்கல் நிகழ்வு