வங்காள தேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி

வங்காள தேசம்  தலைநகர் டாக்காவின் ஷியாம்பஜார் பகுதியில் உள்ள புரிகங்கா ஆற்றில் காலை 9.33 மணியளவில்  டாக்கா செல்லும் படகு’ மார்னிங் பேர்ட் ‘கவிழ்ந்தது. இந்த படகில் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.
ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 23 பேர் பலியானார்கள்.11 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என தீயணைப்பு அதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு தலைமையக அதிகாரி ரோசினா இஸ்லாம் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.