கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் – ரஷியா தகவல்

கொரோனா வைரசை குணப்படுத்த வாய்ப்புள்ள 3 மருந்துகள் தயாராக இருப்பதாக ரஷிய விஞ்ஞான அகாடமியின் துணைத்தலைவரும், உயிரி மருத்துவ அறிவியல் பிரிவின் தலைவருமான விளாடிமிர் செகோனின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

ரஷிய விஞ்ஞான அகாடமியின் கிளையில் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதை கொரோனாவை குணப்படுத்த பயன்படுத்தலாமா என்று சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். தற்போது, வைரஸ் சுவாச தொற்றை குணப்படுத்துவதற்கான ஒரு விசேஷ இன்ஹேலர் தயாராக உள்ளது. அது, கொரோனா சிகிச்சைக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதுகிறோம்.

ஜப்பானிய மருந்து ஒன்றின் அடிப்படையில், மற்றொரு மருந்து ரஷியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னொரு மருந்து, ஆய்வுக்கூட பரிசோதனை முடிந்து, கொரோனா சிகிச்சைக்கான பரிசோதனைக்கு தயாராக உள்ளது. இந்த 3 மருந்துகளையும் பரிசோதிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.