பொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும். – மு.திருநாவுக்கரசு

பொய்யான நல்லிணக்கத்திற்கிடப்பட்ட  மெய்யான முற்றுப்புள்ளியும்
மாற்றுத் தலைமையின் அவசியமும்.
மு.திருநாவுக்கரசு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிறைவேறியதும் ஒரு குடிமகன்கூட கொல்லப்படாமல் ‘பயங்கரவாதம்’ முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது என்று ராஜபக்ஷ அரசாங்;;;கம் அனைத்து ஊடகங்கள் ஊடாகவும் திரும்பத் திரும்ப வானளாவப் பொய்யுரைத்தது.
‘பயங்கரவாதம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதால் ‘நாடு ஒன்றுபடுத்தப்பட்டுவிட்டது, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம்’ என்பனவெல்லாம் ஏற்பட வழிபிறந்துவிட்டது. பாதுகாப்புப் படையினரின் தியாகத்தாலும் வீரத்தாலும் தமிழ் மக்கள் ‘பயங்கரவாதத்தின்’ பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள். இந்நாட்டை பாதுகாப்புப் படையினர் தம் தியாகத்தால் மீண்டும் ஐக்கியப்படுத்தியமைக்கு இந்த நாடு என்றுமே அவர்களுக்குக் கடமைப்பட்டது.’ என்று பொய்-புளுகு-புரட்டுக்களைக் கூறியதுடன் சமாதானமும், நல்லிணக்கமும் பிறந்துவிட்டது என்று மேலும் பொய்களுக்கு எல்;லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் பொய்யுரைத்தனர்.
இத்தகைய பொய்களைக் கடந்த பத்தாண்டுகளாக திரும்பத் திரும்பக் கூறிவந்தனர். முன்னைய ராஜபக்ஷ அரசாங்கமும் சரி, அதன் பின்வந்த நல்லாட்சி அரசாங்கமும் சரி இந்;தப் பொய்களைச் சிறிதும் தயக்கமின்றிக் கூறியதுடன் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் ‘இன நல்லிணக்கமே’ தமது முதற்பணியென்று மேலும் ஒரு பிரகடனத்தைச் செய்தனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையும் வருடம் இது. இவர்கள் கூறிவரும் ‘இனநல்லிணக்கம்’ என்ற பொய்யான வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உயிர்த்த ஞாயிறு நாளன்று கிறிஸ்தவ தேவலாயங்களிலும், உல்லாச விடுதிகளிலும் நிகழ்ந்த இரத்தம் தோய்ந்த தொடர் குண்டுத் தாக்குதல்கள் அமைந்தன.
சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழின எதிர்ப்புக் கொள்கையில் அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவந்த இனஒடுக்குமுறை, கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்பவற்றிற்கு எதிராக விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த விடுதலைப் போராட்டத்தை இனப்படுகொலையின் வாயிலாக ராஜபக்ஷ அரசாங்கம் அழித்தொழித்தது.
‘பயங்கரவாதம்’ முடிவிற்குக் கொண்டுவரப்படுவதாகக் கூறி நிராயுதபாணிகளான ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் வகைதொகையின்றி சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், இளைஞர் – யுவதிகள், பெரியவர்கள் – முதியவர்கள், நோயாளிகள் என எவ்வித வேறுபாடுமின்றி ‘படுகொலை இயந்திரம்’ (‘முடைடiபெ ஆயஉhiநெ’) என்று சொல்லப்படுகின்ற சிங்கள இராணுவத்தால் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஒரு குடிமகனும் கொல்லப்படாத ‘ணுநசழ ஊயளரயடவல’ இராணுவ வெற்றி என்று கூறிவந்த பொய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடுநிலையான ஊடகமான ‘சேனல்-4’ தொலைக் காட்சி தயாரித்த களநிலை உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட தொடர் ஆவணப்படங்கள் அமைகின்றன. அதனை உடனடுத்து ஐநா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நியமித்த விசேட நிபுணர் குழு ஒன்று 40,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஐநா பொதுச் செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பித்ததோடு ‘ணுநசழ ஊயளரயடவல’ என்ற பொய்க்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆயினுங்கூட சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபுறம் விதண்டாவாதம் புரிவதையும், மறுபுறம் சமாதானம் பற்றி பொய் கூறுவதையும் நிறுத்தவில்லை. அதேவேளை ராஜபக்ஷ அரசாங்கம் முடிவிற்கு வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன் சிறிசேன – ரணில் கூட்டு அரசாங்கம்  2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது. ‘நல்லாட்சி’ என்ற பெயருடன் ‘இனநல்லிணக்கம்’ என்ற மந்திரவார்த்தையைப் பிரயோகித்துக் கொண்டு தமது ‘செங்கோலை’ உயர்த்தினர்.
ஆனால் அவர்களினது ஐந்தாவது ஆண்டுகால ஆட்சிக் காலத்திலும் எத்தகைய நல்லிணக்கமும் ஏற்படவில்லை, புதிய அரசியல் யாப்பும் உருவாக்கப்படவில்லை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் காணப்படவில்லை. ஆயினுங்கூட ஐந்;;தாண்டுகளாய்த் தாம் ‘இனநல்லிணக்க’ நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருவதாக தெளிவாக ஆட்சியாளர்கள் பொய் சொல்லிவருவதை நிறுத்தவில்லை. கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தாம் தொடர்ந்து ‘நல்லிணக்க’ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உதவி வருவதாகவும் அந்தப் பணி தொடரும் என்றும் இவ்வாண்டில் (2019) புதிய அரசியல் யாப்பு உருவாக்;கப்பட்டு ‘நல்லிணக்க’ ரீதியிலான அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்றும் பொய்யுரைக்கத் தயங்கவில்லை.
இத்தகைய பொய்களின் பின்னணியில் நாட்டில் ‘இனநல்லிணக்கம்’ கடந்த பத்தாண்டுகளாக ஏற்படவில்லை  என்பதை முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து எழுந்த ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ இயக்கம் ‘சர்வதேச பயங்கரவாதிகள்’ என்று ஐநா சபையால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் ‘ஐஎஸ்’ என்ற ‘இஸ்லாமிய அரசு’ உடன் கூட்டுச் சேர்ந்து நடாத்திய தாக்குதல்கள் நிரூபிப்பதாய் அமைந்தன.
இவ்வாறு இலங்கை வரலாறு கண்டிராத தொடர் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதன் வாயிலாக முன்னெப்பொழுதும் ஏற்பட்டிருக்காதளவு பெருந்தொகையிலான மக்கள் அதாவது 360க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் போனதான துயர சம்பவம் நடந்தேறியது. இத்தகைய சேதம் விளைவிக்கவல்ல வரலாறு கண்டிராத பாரிய தொடர் குண்டுத் தாக்குதல்களை ஒருசில மணிநேரத்தில் இலங்கைத் தீவு சந்தித்ததும் அதனை ஒரு இஸ்லாமிய குழு நிறைவேற்றியதும் ‘இனநல்லிணக்கம்’ நாட்டில் ஏற்படவில்லை என்பதை உலக அரங்கிற்குத் தெளிவாகப் பறைசாற்றியதாய் அமைந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ அரச பயங்கரவாதத்தை ராஜபக்ஷ அரசாங்கம் 2005ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்த  போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காணப்படும் என்றும் 13வது திருத்தச் சட்டத்திற்கு மேல் சென்று ’13வது திருத்தச் சட்டம் பிளஸ் (10)’ என இந்தியா உட்பட அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கு ராஜபக்ஷ அரசாங்;;;கம் வாக்குறுதி அளித்து அதற்கு வழிவகுக்கும் வகையில் முதலில் புலிகளின் ‘பயங்கரவாதம்’ ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கூறி பாரிய அளவில் சர்வதேச ஆதரவைப் பெற்று தனது அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றியது.
எப்படியோ இனப்படுகொலையின் வாயிலாக ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்ததன் வாயிலாக அரச பயங்கரவாதம் வெற்றி பெற்ற பின்பு எத்தகைய அரசியல் தீர்வையும் சிங்கள ஆட்சியாளர்கள் முன்வைக்கவில்;;லை.
‘கிழக்கில் உதயம்’, ‘வடக்கில் உதயம்’. ‘அபிவிருத்தி’, ‘நல்லாட்சி – நல்லிணக்கம்’, ‘ஜனநாயகம்’ என பல்வேறு சொற்சோடனை மிகுந்த பெரும் பொய்களை முறையே ராஜபக்ஷ அரசாங்கமும், சிறிசேன-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் கூறி வந்;;தனவேதவிர எத்தகைய ‘நல்லிணக்கமும்’, ‘சமாதானமும்’ ஏற்படவில்லை.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைக் காணும் வகையில் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தப் போவதாக ‘நல்லாட்சி’ என்ற கொள்கையை முன்வைத்த சிறிசேன-ரணில்-சந்திரிகா அணியும், அவர்களுடன் கூட்டுச் சேர்ந்த சம்பந்தன் – சுமந்திரன்-சேனாதி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ரவுப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசும் மற்றும் மலையகத் தமிழ்த் தலைவர்களும் இணைந்து கூறினர்.
‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ முதல் மூன்று சிங்;களத் தூண்களான சிறிசேன-ரணில்-சந்திரிகா என்ற பாரிய கட்டிடத்திலிருந்து சந்திரிகா என்ற பெருந்தூண் முதலில் கழன்று போனது. அடுத்து சிறிசேன என்ற மையத்தூணும் கழன்று போனது. இறுதியாக ரணில் என்ற ஒற்றைக்கால் தூண் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், முஸ்லிம் காங்கிரசுடனும் மற்றும் மலையகத் தமிழ்த் தலைவர்களுடன் இணைந்து தொங்கி ஈடாடிக் கொண்டிருக்கும் நிலையில் காட்சி அளித்தது. இத்தகைய பாரிய ஈடாட்ட நிலையில் ‘நல்லிணக்கம்’ என்ற பொய்யை நடைமுறையில் சந்தித்த பின்பும் அதன் பொய்யும் – புரட்டும் – புளுகும் ஓயவில்லை.
இந்நிலையிற்தான் சர்வதேச பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்ட ‘இஸ்லாமிய அரசுடன்’ இணைந்து உள்நாட்டு இஸ்லாமிய இயக்கமான ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ இயக்கத்தின் தொடர் குண்டுத் தாக்குதல் அனைத்து பொய்-புளுகுகளையும் கேள்விக்கு இடமின்றி நிதர்சனமாய்த் தகர்த்துள்ளது.
இத்தொடர் குண்டுத் தாக்குதல்களில் ‘சர்வதேச பயங்கரவாத அமைப்பு’ என்று முத்திரை குத்தப்பட்ட ஐஎஸ் அமைப்பும் இலங்கையின் உள்நாட்டு அமைப்பான ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ அமைப்பு மட்டும் சம்பந்தப்படவில்லை கூடவே ஒரு பகுதி சிங்கள ஆட்சியாளர்களும், இலங்கை புலனாய்வுத்துறையினரும் மறைகரமாய் நின்று சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
இத்தொடர் குண்டுத் தாக்குதல்கள் சம்பந்தமாக இலங்கை அரசிற்கு இந்திய அரசு முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்களை விபரமாகவும், துல்லியமாகவும் வழங்கிய போதிலும் தாக்குதல்களைத் தடுப்பதற்கான, பொது மக்களைப் பாதுகாப்பதற்கான எத்தகைய முன்னேற்பாடான நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. குறிப்பாக பிரதமராகிய தனக்குக்கூட இத்தகைய முன்கூட்டிய புலனாய்வுத் தகவல்கள் பற்றிய விபரங்கள் ஜனாதிபதியால் அறிவிக்கப்படவில்லை என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்கள் வாயிலாக வெளிப்படையாகக் கூறுவது ஜனாதிபதிக்கும் – பிரதமருக்கும் இடையே ஒரு பனிப் போர்; நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டுகின்றது.
இத்தாக்குதல்களுக்குப் பின்னால் மேற்படி ஒருபகுதி ஆட்சியாளர்களினதும், இராணுவ மற்றும் பொலீஸ் புலனாய்வுத்துறையினரதும் கரங்கள் உண்டென்றால் இத்தகைய சிங்கள ஆட்சியாளர்களிடமும், புலனாய்வுத் துறையினரிடமும் அபாயகரமான ஒரு நிகழ்ச்சி நிரல் மறைகரமாக செயற்பாட்டில் உள்ளது எனத் தெரிகிறது.
இத்தாக்குதல்கள் நடந்ததும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தமிழ் மக்கள் மீண்டும் வெளிப்படையான இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டுவிட்டனர். 2009ஆம் ஆண்டு முன் எங்;;;கெல்லாம் இராணுவ காவல் அரண்;;களும், சோதனைச் சாவடிகளும் இருந்;தனவோ அங்கெல்லாம் இப்;போது இராணுவக் காவல் அரண்களும், இராணுவ-பொலீஸ் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுவிட்டன. மீண்டும் தெளிவான இராணுவ ஆட்சியும், இராணுவ மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டுவிட்டன.
பத்தாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுநாள் இதனை நிறைவேற்றவல்ல ஒரு புள்ளியாய் அமையவல்லதா?
‘நாடு இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாத்திற்கு உட்பட்டுவிட்டது’ என்று கூறி இத்தகைய குழப்பகரமான சூழலில் அரசியல் தீர்வை முன்னெடுக்க முடியாது, புதிய அரசியல் யாப்பை உருவாக்க முடியாது என்று கூறி சிங்;கள – பௌத்த மேலாதிக்கம் தமிழ் மக்களுக்கு எதிராக தமது செங்;;கோலை உறுதியுடன் உயர்த்தப் போகிறது. இந்நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியே தமிழ் மக்கள் முன் பெரிதாய் எழுந்துள்ளது.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிறைவேறிய பின்னான சூழலில் அடுத்தது என்ன என்ற கேள்வியும், அதற்கான பதிலும் அப்போதே தேடப்பட்டிருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரழிவின் துயரத்திலும், பெருந்தோல்வியின் அதிர்ச்சியிலும் இருந்துவிடபட ஓராண்டு காலம் அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அடுத்த ஓராண்;டின் பின்னாவது மேற்படி இனி அடுத்தது என்ன என்ற கேள்வியுடனும், அதற்கான பதில் தேடும் வகையிலும் தமிழ்த் தலைவர்களும், அறிஞர்களும் செயற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்த் தலைவர்கள் நாடாளுமன்றப் பதவிகளை தலையில் சூடியவாறு சிங்கள இனவாதத்திற்குச் சேவை செய்யும் வகையில் ஓடுகாலி அரசியலில் ஈடுபட்டனர். இதனைக் கண்டு முதலில் கோபங்கொண்ட திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைவிட்டு வெளியேறி மாற்று அரசியலை மேற்கொள்ளத் தலைபட்டனர். இந்;;தப் பாதையில் மாற்று அரசியல்;; கோரி திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைவிட்டு வெளியேறினர். பின்பு கூடவே வடமாகாண முன்னாள் முதலமைச்சர் திரு.சி.வி.விக்கேனஸ்வரன் அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான தனது உறவைத் துண்டித்துக் கொண்டு மாற்று அரசியல் தலைமையை உருவாக்கும் பக்கம் முன்னிலைப் பாத்திரம் வகிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் தற்;போதைய கேள்வி ஓடுகாலி அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறைகூறிக் கொண்டிருக்க தேவையில்லாதவாறு அவர்கள் தம்மை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளனர். அப்படியென்றால் இனி மாற்று அரசியல் பேசுபவர்களின் பணி என்ன?
இக்கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மேற்படி மாற்று அரசியலைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் உண்டு. இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திட்டித் தீர்த்துக்கொண்டிருப்பதில் நேரத்தைச் செலவழிக்காமல் ஒரு புதிய, பலம் பொருந்திய, பரந்தளவிலான மாற்றுத் தலைமையை உருவாக்கும் தகுதியும், ஆற்றலும் தமக்கு உண்டா என்ற கேள்விக்கு பதில் காணும் வகையில் மேற்படி மாற்றுத் தலைமை அமைய வேண்;;;டும் என்ற கொள்கையை முன்வைத்தவர்களின் பணி முன்னிலையில் உள்ளது. மாற்றுத் தலைமையைப் பற்;;றிப் பேசிய மேற்படி தரப்பினர் தமக்கிடையே ஒருவருக்கு எதிராக இன்னொருவர் அம்புகளை ஏவுவதைத் தவிர்த்து பலம்பொருந்திய, பரந்துபட்ட மாற்றுத் தலைமையை தாமதிக்காது உருவாக்க வேண்டிய அவசியத்தை ‘உயிர்த்த ஞாயிறு’  தாக்குதலைத் தொடர்ந்த அரசியல் நிலவரம் பறைசாற்றி நிற்கின்றது.
பத்தாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுநாள் இதனை நிறைவேற்றவல்ல ஒரு புள்ளியாய் அமையவல்லதா?
மு.திருநாவுக்கரசு