சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 பேர் பலி

நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரிக்டர் அளவு கோலில் 2.3 புள்ளிகளாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சற்றும் எதிர்பாராத விதமாக நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது. தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, உடனடியாக மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் மீட்பு பணிக்கு பிறகு 9 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் சீனாவில் அடிக்கடி இதுபோன்ற நிலக்கரி சுரங்க விபத்துகள் ஏற்படுகின்றன.

நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் தேவையான பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்காததே விபத்துகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதனால் சீனாவில் ஆண்டுதோறும் 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.