அக­தி­களை திருப்பி அழைப்­பது சாத்­தி­யமா?

இலங்கைத் தமிழ் அக­தி­க­ளுக்கு குடி­யு­ரிமை அல்­லது இரட்டைக் குடி­யு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கைகள் இந்­தி­யாவில் வலு­வ­டைந்­தி­ருக்­கின்ற சூழலில், அங்­கி­ருந்து 3000 அக­தி­களை விரைவில் இலங்­கைக்கு திருப்பி அழைத்துக் கொள்­ள­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்த்­தன கூறி­யி­ருக்­கிறார்.

கடந்த 9, 10ஆம் திக­தி­களில் புது­டெல்­லிக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, இலங்கைத் தமிழ் அக­தி­களை திருப்பி அழைத்துக் கொள்­வது குறித்து அவர் , பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

இலங்கை அக­தி­களை விரை­வாக திருப்பி அழைத்துக் கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் குறித்து, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜெய்­சங்­க­ருடன் பேச்­சுக்­களை நடத்­தி­ய­தாக, வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்த்­தன புது­டெல்லி ஊட­கங்­க­ளிடம் கூறி­யி­ருந்தார்.

அடுத்த சில மாதங்­க­ளுக்குள் 3000 அக­தி­களை திருப்பி அழைத்துக் கொள்­ள­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டி­ருந்­தாலும், அவர்­களை திருப்பி அழைத்துக் கொள்­வது குறித்த தெளி­வான கால­எல்­லை­யையோ, எத்­தனை பேர் திருப்பி அழைக்­கப்­ப­ட­வுள்­ளனர் என்ற துல்­லி­ய­மான விப­ரங்­க­ளையோ அவர் வெளி­யி­ட­வில்லை.

முதல் கட்­ட­மாக சுமார் 3000 பேர் திருப்பி அழைக்­கப்­ப­ட­வுள்­ளனர், கூடிய விரைவில் அது நடக்கும் என்று மாத்­திரம் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

எனினும், இலங்கை திரும்­பி­யதும், கொழும்பு ஆங்­கில இதழ் ஒன்­றுக்கு கருத்து வெளி­யிட்­டுள்ள அவர், பெப்­ர ­வ­ரியில் அது சாத்­தி­ய­மாகும் என்றும் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், இது­போன்ற செய்­திகள் ஊட­கங்­களில், பல­முறை வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. ஆனால், இந்­தி­யா­வி­லுள்ள இலங்கை அக­தி­களைத் திருப்பி அழைத்துக் கொள்­வ­தற்கு ஆக்­க­பூர்­வ­மான பொறி­முறை இன்­னமும் உரு­வாக்­கப்­பட­வில்லை.

தாமாக விரும்பி நாடு திரும்பும் அக­தி­களை விரை­வாக அனுப்பி வைப்­ப­தற்­கான, பொறி­மு­றையை உரு­வாக்­கு­வதில் இந்­திய, இலங்கை அர­சாங்­கங்­களும், சம்­பந்­தப்­பட்ட துறைகள் மற்றும் முகவர் அமைப்­பு­களும் இன்­னமும் வெற்றி பெற­வில்லை என்­பது தான் உண்மை.

இந்­தி­யாவில் சுமார் ஒரு இலட்சம் இலங்கைத் தமி­ழர்கள் தங்­கி­யுள்­ள­தாக தோரா­ய­மான ஒரு மதிப்­பீடு உள்­ளது. ஆனால் அது இந்த எண்­ணிக்­கையை விட அதி­க­மாக இருக்­கலாம்.

ஏனென்றால், முறை­யான பதி­வுகள் இல்­லா­த­வர்­களும் இந்­தி­யாவில் நீண்­ட­கா­ல­மாக தங்­கி­யுள்­ளனர். அவர்கள் பெரும்­பாலும் இந்த கணக்­கெ­டுப்­புக்குள் வந்­தி­ருக்­க­வில்லை. அவர்­களை சேர்த்துக் கொள்­ளாமல் தான், சுமார் 90 ஆயிரம் இலங்கைத் தமி­ழர்கள் இந்­தி­யாவில் தங்­கி­யுள்­ளனர் என்று கணக்கு காண்­பிக்­கப்­ப­டு­கி­றது.

இவர்­க­ளிலும், 60 ஆயிரம் பேரே இலங்­கைக்கு திரும்பிச் செல்­வார்கள் என்று அதி­கா­ரி­களால் கணிக்­கப்­ப­டு­கி­றது.

ஏனைய 30 ஆயிரம் இலங்கைத் தமி­ழர்கள், மீண்டும் நாடு திரும்­பவே மாட்­டார்கள் என்று கரு­தப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில் திரு­மணம் செய்து கொண்­ட­வர்கள், குடும்ப உறுப்­பி­னர்­களைக் கொண்­டுள்­ள­வர்கள், இந்­தி­யாவில் தொழில் வாய்ப்பைப் பெற்­றி­ருப்­ப­வர்கள், கல்வி கற்றுக் கொண்­டி­ருப்­ப­வர்கள், இந்­திய வாழ்க்கை முறை­யுடன் ஒன்­றித்து இயல்­பாக்கம் அடைந்து விட்­ட­வர்­களால் நாடு திரும்ப முடி­யாது.

இலங்­கையில் எத்­த­கைய வச­திகள் கிடைத்­தாலும், எந்­த­ள­வுக்கு இயல்பு நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும், அவர்கள் நாடு திரும்பப் போவ­தில்லை.

எஞ்­சி­யுள்ள 60 ஆயிரம் பேரை இலங்­கைக்குத் திருப்பி அழைத்துக் கொள்­வது பற்­றியே அர­சாங்­கங்­களும், அதி­கா­ரி­களும் பேச்­சுக்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

போர் முடிந்த காலத்­தி­லி­ருந்து இதற்­கான பேச்­சுக்கள் நடத்­தப்­ப­டு­கின்­ற­னவே தவிர, நடை­முறைச் சாத்­தி­ய­மான வழி­மு­றைகள் எதுவும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.

ஒவ்­வொரு வெளி­வி­வ­கார அமைச்­சரும் புது­டெல்­லியில் பேச்­சுக்­களை நடத்­து­கி­றார்­களே தவிர, இந்த விவ­கா­ரத்தில் ஆக்­க­பூர்­வ­மாக உரு­வாக்­கப்­பட வேண்­டிய செயல்­முறை சரி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

அவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தால், போர் முடிந்த பின்னர் கணி­ச­மான மக்கள் நாடு திரும்­பி­யி­ருப்­பார்கள்.

இந்­தி­யாவில் உள்ள இலங்கைத் தமி­ழர்கள் நாடு திரும்பும் விட­யத்தில் இரண்டு விட­யங்கள் முக்­கி­ய­மா­னவை.

இலங்­கையின் சூழல் பற்­றிய நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பாடு அதில் முத­லா­வது.

விரை­வாக நாடு திரும்­பு­வ­தற்­கான – கால­தா­ம­த­மற்ற பொறி­மு­றையை உரு­வாக்­கு­வது இரண்­டா­வது.

இந்த இரண்டு விட­யங்­க­ளிலும், இந்­தியா, இலங்கை மற்றும் சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் அனைத்தும் கோட்டை விட்டு விட்­டன என்று தான் கூற வேண்டும்.

 

இலங்­கையில் போர் முடிந்து விட்­டது தவிர, முழு­மை­யான இயல்பு நிலை உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை.

ஆட்சி மாற்­றங்­க­ளுக்­கேற்ப உறு­தி­யற்ற நிலை, பதற்றம், நெருக்­க­டி­யான சூழல்கள் ஏற்­படும் சாத்­தி­யங்கள் இன்று வரை காணப்­ப­டு­கி­றது.

இந்த நிலை முழு­மை­யாக மாற வேண்டும். அமைதி திரும்பி விட்­டது அர­சியல் தீர்வு எட்­டப்­பட்டு விட்­டது, எந்த பதற்­றமும் இனி உரு­வாக வாய்ப்­பில்லை, ஆட்சி மாற்­றங்­களால் தமி­ழர்­க­ளுக்கு ஆபத்து வந்து விடாது என்ற நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது இலங்கை அர­சாங்கம் தான்.

இலங்கை அர­சாங்கம் இந்தப் பங்கை சரி­யாக செய்தால், தமிழ் மக்­க­ளுக்கு நாடு திரும்பும் எண்ணம் தானா­கவே வரும். அவ்­வா­றான நிலையை உரு­வாக்­கு­வதில் இந்­தி­யா­வுக்கும் பங்­குள்­ளது.

ஏனென்றால் இலங்கைத் தமி­ழர்­களின் நலன்­களில் அக்­க­றை­யுள்­ள­தாக இந்­தியா எப்­போதும் கூறி வந்­தி­ருக்­கி­றது. அதற்­கா­கவே இலங்­கை­யுடன் உடன்­பா­டு­க­ளையும் செய்து கொண்­டி­ருக்­கி­றது.

இலங்­கையின் நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான அழுத்­தங்­க­ளையோ, வழி­மு­றை­க­ளையோ இந்­தி­யாவும் செய்­தாக வேண்டும். அது நாடு திரும்பும் மக்­க­ளுக்கு நம்­பிக்­கையைக் கொடுக்கும்.

அடுத்து நாடு திரும்பும் மக்­க­ளுக்கு, இலங்­கையில் கிடைக்க வேண்­டிய அடிப்­படை வச­திகள் கிடைப்­பதை உறுதி செய்ய வேண்டும்.

இருப்­பிடம், தொழில், கல்வி, வாழ்­வா­தாரம் என்­பன அவற்றில் முக்­கி­ய­மா­னவை. இந்த நான்கு முக்­கிய விட­யங்கள் விட­யத்தில் நம்­பிக்­கை­யான ஒரு பதில் கிடைக்­காமல், எந்­த­வொரு இலங்கைத் தமிழ்க் குடும்­பத்­தையும், சுய விருப்பின் அடிப்­ப­டையில் திருப்பி அழைத்துக் கொள்ள முடி­யாது.

அக­தி­க­ளாக வாழ்ந்­தாலும், தமக்­கு­ரிய கௌரவம், வசதி வாய்ப்­பு­களை இந்­தி­யாவில் ஏற்­ப­டுத்திக் கொண்டு விட்­ட­வர்கள், அவற்­றை­யெல்லாம், துறந்து விட்டு, வெற்று மனி­தர்­க­ளாக, எதிர்­காலம் பற்­றிய எந்த உத்­த­ர­வா­தமும் இல்­லாமல் நாடு திரும்ப முடிவு செய்­ய­மாட்­டார்கள்.

ஆக, இலங்கைத் தமி­ழர்­களை திருப்பி அழைத்துக் கொள்ளும் செயற்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு, முதலில், நாடு திரும்­பு­கின்­ற­வர்­களின் அடிப்­படைத் தேவை­க­ளையும், வச­தி­க­ளையும் இனங்­கண்டு, அவற்­றுக்­கான தீர்­வு­களை முன்­வைக்க வேண்டும்.

இந்த இரண்டு நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டு­களும் தான், சுய­வி­ருப்பின் அடிப்­ப­டையில் தாயகம் திரும்­பு­வ­தற்­கான உந்­து­தல்­களை இந்­தி­யா­வி­லுள்ள அக­தி­க­ளுக்கு ஏற்­ப­டுத்தும்.

இந்­தி­யா­வி­லுள்ள இலங்கைத் தமிழ் அக­திகள் மத்­தியில் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டு­களை சந்­தி­ர­காசன் தலை­மை­யி­லான அமைப்பு மேற்­கொண்டு வரு­வ­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்த்­தன கூறி­யி­ருக்­கிறார்.

சந்­தி­ர­கா­சனின் ஈழ ஏதி­லியர் மறு­வாழ்வு அமைப்பு ஒரு தொண்டர் நிறு­வனம். அதனால், அக­திகள் மத்­தியில் எவ்­வாறு நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும்?

இலங்கை திரும்பும் மக்­களின் பாது­காப்­பையோ, அர­சியல் உரி­மை­க­ளையோ, வாழ்­வா­தா­ரத்­தையோ, அவர்­களின் காணிகள், வீடுகள் திரும்பக் கிடைப்­ப­தையோ, தொழில் உத்­த­ர­வா­தத்­தையோ, கல்வி மற்றும் பிற அடிப்­படை வச­தி­க­ளையோ அவர்­களால் உத்­த­ர­வாதம் அளிக்க முடி­யாது.

அதனை அர­சாங்கம் தான் ஏற்­ப­டுத்த வேண்டும். நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அர­சாங்கம் தேவை­யான முயற்­சி­களை எடுக்க வேண்டும்.

அரச சார்­பற்ற நிறு­வனம் ஒன்று சில விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்­த­லாமே தவிர, நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வது என்­பது தனியே, ஒரு செயற்­திட்டம் அல்ல.

அது உள்­ளத்­தி­லி­ருந்து வரக் கூடிய ஒரு உணர்­வாக இருக்க வேண்டும். அவ்­வா­றான ஒரு நிலை இது­வரை அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இவை எல்­லா­வற்­றுக்கும் அப்பால், இந்­தி­யா­வி­லுள்ள எந்­த­வொரு அமைப்பும், நிர்­வாக அல­கு­களும், இலங்கைத் தமி­ழர்­களை திருப்பி அனுப்­பு­கின்ற போக்கில் செயற்­ப­ட­வில்லை.

சுய­வி­ருப்பில் நாடு திரும்­பு­கின்­ற­வர்­களைத் தடுக்கவில்லை. அதேவேளை, யாரையும் நாடு திரும்புமாறு அழுத்தம் கொடுக்கவோ, அதற்கான உந்துதல்களைக் கொடுக்கவோ இல்லை. இந்திய, தமிழக அரசுகள் இந்த விடயத்தில் மிக உறுதியான நிலைப்பாட்டில் உள்ளன.

அதனால் தான், நாடு திரும்ப முனையும் இலங்கைத் தமிழர்களிடம் திரும்பத் திருப்ப, பொலிஸ் தரப்பு, குடிவரவுத் துறை, அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு உள்ளிட்ட எல்லா தரப்புகளினதும் நேர்காணல் அல்லது விசாரணைகளுக்கு முன்னிலையாகின்ற போதும், கேட்கப்படும் முதல் கேள்வி, யாருடைய நெருக்குதல் அல்லது நிர்ப்பந்தத்தில் பேரிலா நாடு திரும்புகிறீர்கள் என்பது தான்.

அதற்கு முக்கியமான காரணம், சுய விருப்பில் தான் நாடு திரும்புகின்றனர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புகிறது. ஐ.நாவும் முனைகிறது.

(மிகுதி அடுத்த வாரம்)