10 வருடங்களுக்கு சக்திமிக்க அரசாங்கம் அமைக்க முடியும்

எதிர்வரும் காலத்தில் பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த ஜனாதிபதி தேர்தலில் தங்களுடைய கட்சி வெற்றி பெறும் என்பதில் நூற்றுக்கு ஐநூறு வீதம் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகவெரட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்று எதிர்வரும் 10 வருடங்களுக்கு சக்திமிக்க அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திறமை ஐக்கிய தேசிய முன்னணிக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.