கட்சியில் பிளவு ஏற்படாமல் வெற்றியை நோக்கி செல்வோம்

கட்சியை பாதுகாத்துக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக கட்சியில் பிளவு ஏற்படாமல் வெற்றியை நோக்கி செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.