லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற அமெரிக்கர் விமான நிலையத்தில் கைது

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இயக்கம் லஷ்கர் இ தொய்பா.  இந்த தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 166க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில், அமெரிக்காவில் இந்த தீவிரவாத இயக்கம் வளர்ச்சி அடைவதற்கான வேலைகள் நடந்துள்ளன.
சமூக வலைதளம் வழியே இந்த இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் பணியும் நடந்து வந்துள்ளது.  இதனடிப்படையில் டெக்சாஸ் நகரை சேர்ந்த 18 வயது மைக்கேல் என்பவர் மீது எப்.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தது.
அவர் தேர்வு செய்த நபர்களை பாகிஸ்தானுக்கு தீவிரவாத பயிற்சிக்கு அனுப்பும் வேலையை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் செல்லும் சர்வதேச விமானத்தில் செல்ல இருந்த ஜீசஸ் வில்பிரெடோ என்கார்னேசியன் என்பவரை ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்தனர்.  வில்பிரெடோ பாகிஸ்தானுக்கு சென்று லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற முயன்றுள்ளார் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.