மைத்திரிபால மீண்டும் போட்டியிட விரும்பாததால் கோட்டபாயவிற்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.