ஹாலிவுட் காதல் ஜோடி அன்னா-ஸ்கைலர் பிரிந்தனர்

ஹாலிவுட் நடிகை அன்னா கேம்ப் (வயது 36). இவர் கடந்த 2010-ம் ஆண்டு நடிகர் மைக்கேல் மோஸ்லேயை காதலித்து மணந்தார். 3 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். அதன்பின்னர் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2013-ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அன்னா கேம்ப் புகழ்பெற்ற நகைச்சுவை படமான ‘பிட்ச் பெர்பெக்ட்’டில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஸ்கைலர் ஆஸ்டினை (31) காதலித்தார். இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். 2016-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். 3 ஆண்டுகள்தான் இந்த திருமணமும் நீடித்து இருக்கிறது.

இப்போது அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இதை இருவரும் உறுதி செய்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், “ நாங்கள் பிரிந்து விட்டோம் என்பதை உறுதி செய்கிறோம். இருவரும் பரஸ்பரம் பேசி பிரிவது என முடிவு செய்தே பிரிந்திருக்கிறோம். எங்களது அந்தரங்கத்தை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.