தென்னை பயிர்ச் செய்கைக்காக ‘app’ அறிமுகம்

தென்னை பயிர்ச்செய்கை வாரியத்தின் தேங்காய் பயிற்செய்கை ஊக்குவிப்பு வாரம் நேற்றுடன் (09) முடிவடைந்தது.

கொத்மலையில் உள்ள மகாவலி மஹாசாய வளாகத்தில் நேற்று இது தொடர்பில் நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் கொத்மலை மகாவலி மஹாசாய வளாகத்திற்கு அருகில் தென்னை மரக்கன்று நடும் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும், தேங்காய் பயிர்ச் செய்கை வாரியத்தினால் தேங்காய் பயிர்ச்செய்கை தொடர்பில் ´app´ ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.