வீதி விபத்துக்களில் உயிரிழப்பவர்களுக்கான நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிக்க திட்டம்

வீதி விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனடிப்படையில் வாகன காப்புறுதி நிறுவனம் தமது மூன்றாந்தரப்பு காப்புறுதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபைக்கு வழங்கும் நூற்றுக்கு ஒரு சதவீதமான நிதியை, தற்சமயம் நூற்றுக்கு இரண்டு சதவீதமாக அதிகரிக்க முடியும் என்று போக்குவரத்து மற்றும் சிவில்விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விபத்துக்களில் மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.