பெற்றோலிய கூட்டுத்தாபன சம்பவம் – மாநகர சபை உறுப்பினர் மீண்டும் விளக்கமறியலில்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தாக்கல் செய்திருந்த பிணை மனு கோரிக்கையை நிராகரித்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நுழைந்த சந்தர்ப்பத்தில் பதற்ற நிலமையை உருவாக்கியதற்காகவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.