பாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து நேற்று (16) புத்தளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது, பாலுணர்வு மாத்திரைகள் (மதனமோதக) கொண்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டது.

அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து புத்தளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது, இந்த நபரை 6800 பாலுணர்வு மாத்திரைகள் கொண்ட 272 பார்சல்களில் கண்டெடுத்துள்ளனர். மேலும் சந்தேக நபரை தீர சோதிக்கும் போது இவரது கடையில் மற்றும் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 சட்டவிரோத சிகரெட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் 61 வயதான புத்தளம், பாலவி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபருடன் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

போதை மருந்து இல்லாத நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிறுவப்பட்ட ஒருங்கிணைந்த போதைப்பொருள் தடுப்பு திட்டத்திற்கு இணங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், இலங்கை கடற்படை, போதைப்பொருள் மோசடிகளை தடுக்க சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.