மக்கள் விடுதலை முன்னிணியின் உதவி இல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியாது

மக்கள் விடுதலை முன்னிணியின் உதவி இல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் தேசிய சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னிணியின் உதவி இல்லாமலும் அநுர மற்றும் ஹந்துன்நெத்தி ஆகியவர்களின் உதவி இல்லாமலும் எதிர்வரும் 10 வருடங்களுக்கு நாட்டை உருவாக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் மெதமுலான ஊரிற்கு சஜித் பேருந்து ஒன்றை வழங்கி அவரே பேருந்தை ஓட்டிச் செல்வதை அவதானித்தோம். வீதி ஒழுங்கு தெரியாத ஒருவர் எவ்வாறு நாட்டை ஒழுங்காக உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.