ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி

ரஷ்யாவின் சபாகல்ஸ்கி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
மகோய்டூய்- ஸ்ரெடென்சிக்- ஒலோச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பேருந்து பயணித்த போது பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.