நடைபெற இருக்கும் கனடிய சமஷ்டி தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம்

– தர்ஷினி உதயராஜா

கார்பன் வரி (Carbon Tax)

Liberal
இந்த வருடத்துக்கான குறைந்தபட்ச காபன் விலை $20/tonne இந்த விலை 2022 வரை ஒவ்வொரு வருடமும் $10 வீதம் அதிகரிக்கும்.  இதனால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கார்பன் விலைத் திட்டம் இல்லாத மாகாணங்களில் உள்ள தனியாரும், வணிக நிலையங்களும் வரி செலுத்த வேண்டியி ருக்கும். பதிலாக மக்கள் அதிகமாக செலவு செய்யக்கூடிய பணம், Carbon Tax Rebate ஆக மீள வழங்கப்படுகிறது.

Conservative
கார்பன் வரியை நீக்கவே விரும்புகிறது ஆனால், மாகாணங்களின் தெரிவுக்கே விட்டுவிடுகிறது.
பதிலாக, புதிய தரங்களை பூர்த்தி செய்யத் தவறும் மாசு வெளியிடுபவர்களால் நிதியளிக்கப்பட்ட பசுமை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க உறுதி. ஆனால் இது, கார்பன் வரி விதிப்பிலும் எவ்வளவு திறன்மிக்கது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.

NDP
கார்பன் வரியைத் தொடர்ந்து பேண விருப்பம். சில மாற்றங்களை செய்து கூடுதலாக கார்பன் வெளியேற்றுபவர்களுக்கு கூடுதல் வரி விதித்தல்.

குழந்தைப் பராமரிப்பு (Child Care)

Liberal
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை உள்ள குடும்பத்துக்கான கொடுப்பனவு 15% அதிகரிப்பு.
பெற்றோருக்கான கொடுப்பனவுகளுக்கு வரி இல்லை.
பள்ளிக்கு முன்னும், பின்னும் 250,000 புதிய குழந்தை பராமரிப்பு இடங்கள். இதற்கான கட்டணத்தில் 10 % இல்லை.
ஊதிய விடுப்புக்கு தகுதி இல்லாத பெற்றோருக்கு வருமான உத்தரவாதம்.

Conservative
முன்னைய அரசின் Canada Child Benefit தொடர்ந்து பேணப்படும்.
சமூக பரிமாற்ற கொடுப்பனவுகள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று சதவீதம் அதிகரிக்கும்.
புதிய பெற்றோருக்கு வேலை காப்புறுதிக்கு வரி விலக்கு.

NDP
2020க்குள் குறைந்த செலவில், லாப நோக்கற்ற குழந்தை பராமரிப்புக்காக $1 billion. இந்தப் பணம் ஆண்டுதோறும் அதிகரிக்கப்படும்.
அடுத்த 4 வருடங்களில் 500,000 புதிய குழந்தை பராமரிப்பு நிலையங்கள்.
தேசிய ரீதியாக பாடசாலை சத்துணவு திட்டத்தை கொண்டுவருதல். (லிபெரல் கட்சியிடமும் இந்த திட்டமுண்டு.)

காலநிலை மாற்றம் (Climate change)

Liberal
Paris உடன்படிக்கை இலக்கை அடைய, 2030க்குள் நிலக்கரி ஆலைகளை மூடுதல்.
2050க்குள் மாசு அளவு பூச்சியம் என்ற அளவை அடைதல்.
திறனற்ற புதை படிம எரிபொருளுக்கான மானியங்களை முடிவுக்கு கொண்டுவருதல்.
2025க்குள் கனடாவின் கால்ப்பகுதி இயற்கை நிலங்களையும், கடல் வாழ்விடங்களையும் பாதுகாத்தல்.
சுத்தமான தண்ணீருக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கல்.
ஒருமுறை மட்டும் பாவிக்கப்படும் plastic பையைத் தடை செய்தல்.
10 வருடங்களில் $2 billion மரங்களை நாட்டுதல்.

Conservatives
Paris உடன்படிக்கை இலக்கை அடைய உறுதியளித்தாலும், Carbon வரியை இல்லாதொழித்தல்.
அதிக மாசு வெளியிடுபவர்கள் தூய சக்தி மூலங்கள், ஆய்வுகளில் முதலிட கொள்கைகளை வகுத்தல்.
சர்வதேச அளவில் மாசுக்களைக் குறைப்பதற்கு உதவுவதற்காக, கடன் பெற அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடல்.
வணிக நிலையங்களுக்கு பசுமை தொழிநுட்ப காப்புரிமை வரி மீளளிப்பை தொடங்குதல்.

NDP
2030க்குள் 450 megatonne மாசைக் கட்டுப்படுத்த விருப்பம். இதற்காக மறுசீரமைப்புக் கட்டடங்களிலும், புதுப்பிக்கத்தக்க சக்தி, தூய தொழில்நுட்பங்களில் முதலிட காலநிலை வங்கியை உருவாக்க $15 billion  செலவழித்தல்.
இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படும் சமூகங்களுக்கு உதவிகளை அதிகரித்தல்.

பற்றாக்குறை (Deficit)

Liberal
$10 billionக்குக் குறைவாக பற்றாக்குறையைப் பேண உறுதி.
2020-21 இல் $9.3 billion புதிய செலவுகள். அதனால், அந்த வருடத்தில் பற்றாக்குறை $27.4 billion வரை அதிகரிக்கிறது. 2040வரை சமப்படுத்த சாத்தியமில்லை.

Conservative
வரிகளை நீக்கிக்கொண்டு, பற்றாக்குறையையும் இல்லாமல் செய்யும். அது எவ்வாறு என்பது பற்றிக் கூறப்படவில்லை.
வெளிநாடுகளுக்கான உதவித்தொகை 25% குறைக்கப்படும்.
பெரு நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகளும் மானியங்களும் $1.5 billion வரையாவது நிறுத்தப்படும்.
5 வருடங்களுக்குள் சமப்படுத்த முயற்சி

NDP
எப்போது சாத்தியமோ அப்போது சமப்படுத்தப்படும்.

கல்வி  (Eduction)
Liberal
பட்டப்படிப்பு முடிந்து 2 ஆண்டுகளுக்கு மாணவர் கடன்களுக்கு வட்டியில்லை.
பட்டதாரிகள் ஆண்டுக்கு $35,000 க்கு மேல் சம்பாதிக்கும் வரை பணம் செலுத்த வேண்டியதில்லை.
பெற்றோர்கள் தங்கள் இளைய குழந்தை 5 வயதாகும் வரை, வட்டி அறவிடப்படாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடை நிறுத்த முடியும்.
முழுநேர மாணவர்களுக்கான அதிகபட்ச மானியங்களை $ 3,000இல் இருந்து $4,200 வரை உயர்த்தல்.

Conservative
RESPக்கு ஆண்டுக்கு $2,500 டாலர் வரை முதலீடு செய்யும் ஒவ்வொரு டொலருக்கும் 20% முதல் 30% வரை பங்களிப்புகளை உயர்த்துவது, அதிகபட்சமாக ஆண்டுக்கு 750 டொலர்.

NDP
இலவச பல்கலைக்கழக, கல்லூரி கல்விக்கான இலக்கு. இதனை அடைய மாகாணங்களுடன் பேசி tuition feeஐ குறைப்பது. மாணவர்களுக்கான கடன்களுக்கு சமஷ்டி வட்டி வீதத்தைக் குறைத்து, மானியங்களுக்கு பணத்தை கொடுத்தல்.
தேசிய பள்ளி ஊட்டச்சத்து திட்டத்தை செயல்படுத்துதல்.

துப்பாக்கி  (Guns)


Liberals

Bill C-71 அறிமுகம் – சுடுகலன்களுக்கான அனுமதியை வழங்குமுன், விரிவாக பின்புலங்களை ஆராய்தல்.
துப்பாக்கி தொடர்பான மேலதிக கொள்கைகள் – semi-automatic assault-style rifles ban
சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட சுடுகலங்களை திரும்ப வாங்கும் திட்டம்.
கைத்துப்பாக்கியைக் கட்டுப்படுத்த அல்லது தடைசெய்ய மாகாணங்களுக்கு அதிக உரிமை

Conservatives
துப்பாக்கி தடை செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு. இதனால் சட்டபூர்வமாக வைத்திருப்பவர்கள் பாதிப்படைவதாகத் தெரிவிப்பு.
வன்முறை, Gang நடவடிக்கைகளில் தண்டனை பெற்றவர்களுக்கும், துப்பாக்கிகளை மொத்தமாக வாங்கி கறுப்புச் சந்தையில் மறுவிற்பனை செய்பவர்களுக்கும் வாழ்நாள் தடை.
இவற்றுக்கு எதிராக போராடுவதற்கு காவல்துறையினருக்கு அதிக பணம் அளிப்பதாக உறுதி.

NDP
கைத்துப்பாக்கிகளைத் தடை செய்யும் உரிமை ஒவ்வொரு நகரத்துக்கும் வழங்கப்படும்.
சட்டவிரோத துப்பாக்கிகள், கடத்தலை முறையடித்தல்.
இளைஞர்கள் வன்முறையில் சிக்குவதைத் தடுக்க, பள்ளிக்குப் பின்பான விளையாட்டு மற்றும் திட்டங்களுக்காக 5 ஆண்டுகளில் $100 million வழங்க உறுதி.

சுகாதாரம்  (Health Care)

Liberal
தேசிய மருந்தக திட்டதை ஆரம்பிக்க (National Pharma Care) உத்தேசம்.
வருடாந்தம் சுகாதார பரிமாற்ற கொடுப்பனவுகளை 3% அதிகரித்தல் மனநலம், அடிமையாதல், வீட்டு பராமரிப்பு திட்டங்களுக்கு அதிக நிதி.
பெண்களின் சுகாதாரத்துக்கு போதுமான நிதி.
உடல் வலுகுறைந்தோருக்கான நிதி உதவியை இரட்டிப்பாக்குதல்.

Conservatives
வருடாந்தம் சுகாதார பரிமாற்ற கொடுப்பனவுகளை 3% அதிகரித்தல்.
தேசிய மருந்தக திட்டத்துக்கு எதிர்ப்பு. பதிலாக, மாகாணம் மூலமாகவோ, வேலை மூலமாகவோ சுகாதார நிதிப் பாதுகாப்பு அற்றவர்களுக்கு மட்டுமான உதவி.
MRI, CT Scan வாங்க $1.5billion நிதி.
உடல் வலுகுறைந்தோருக்கான நிதி உதவியைப் பெறுவதற்கான  தகுதி நிலையை விரிவாக்கல்.

NDP
நடைமுறையில் உள்ள திட்டத்துடன் மன நலன், பல், கண், காது என்பவற்றையும் சேர்த்தல்.
எல்லோருக்குமான தேசிய மருந்தக திட்டம்.
தனியார் மயப்படுத்துவதுக்கு எதிர்ப்பு.

வீடமைப்பு  (Housing)

Liberal
நியாய விலையில் 10 வருடங்களில் 100,000 வீடுகள்
முதல் முறை வீடு வாங்கும் போது, சில கட்டுப்பாடுகளின் கீழ் புதிய வீடுகளுக்கு 10%மும், மீள்விற்பனை வீடுகளுக்கு 5%மும் மானியம்.
விலையுயர்ந்த வீட்டு சந்தைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல்.
உரிமையாளர் இல்லாத வெளிநாட்டு முதலீடுகளுக்கு மேலதிக வரி விதிப்பு.
சக்தி விரயமாகாத வகையில் 1.5 மில்லியன் வீடுகளை மறுசீரமைத்தல்.
காலநிலையை தாங்கும் வகையிலாக வீடுகளை மாற்ற $40,000வரை வட்டி இல்லாத கடன்.

Conservative
புதிய வீடுகளைக் கட்டுவதற்கான விதிமுறைகளை எளிதாக்குதல்.
CMHC அடமானங்களுக்கான கடன்தொகை வரம்புகளை 30 ஆண்டுகளாக உயர்த்துதல்.
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு அடமான “அழுத்த சோதனை”ஐ மதிப்பாய்வு செய்தல்.
2 ஆண்டுகளில் சக்தியை சேமிக்கும் வகையில் புனரமைப்புக்காக செலவழித்த $20,000 வரையான பணத்தின் 20 % ஐ மீள வழங்குதல்.

NDP
10 ஆண்டுகளில் 500,000 நியாய விலை வீடுகளை அமைத்தல். அதுவரை, வாடகை மானியங்களை வழங்குதல்.
புதிய நியாய விலை வீடுகளை நிர்மாணிப்பவர்களுக்கு GST/HSTஇல்லை.
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு CMHC அடமானங்களுக்கு 30 ஆண்டுகள் விதி.
சக்தியை சேமிக்கும் வகையிலான வீடுகளுக்கு குறைந்த வட்டி கடன்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 15% வீத மேலதிக வரி.

குடிவரவு Immigration
Liberal
ஏற்கனவே குடியேற்றம் அதிகரித்துள்ளது; 2018இல் குடிவரவாளர்கள் எண்ணிக்கை 321,045 இது முதலாம் உலகப் போருக்குப் பின்பான அதிக எண்ணிக்கையாகும் .
2021க்குள் அந்த எண்ணிக்கையை 350,000 ஆக உயர்த்துதல்.
அதே நேரத்தில், புகலிடம் கோரும் வழிமுறைகளையும், குடிவரவு ஆலோசகர்கள் போன்றோரையும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை.

Conservative
ஒவ்வொரு ஆண்டும் எத்தனை குடிவரவாளர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்படவில்லை.
ஆனால் பொருளாதார குடியேற்றத்தின் முக்கியத்துவத்தையும், உண்மையான துன்புறுத்தலை எதிர்கொள்பவர்களுக்கும் முன்னுரிமை.
சட்டவிரோத எல்லைக் கடப்புகளைத் தடுத்தல். பதிலாக, அகதிகளுக்கான தனியார் நிதியுதவியை ஊக்குவித்தல். அகதிகள் பார்வையிடலை அதிகரித்தல்.

NDP
எத்தனை குடிவரவாளர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைவுபடுத்தல். குடும்ப மீளிணைவுக்கு முன்னுரிமை.
குடியேற்ற ஆலோசகர் தொழிற்துறையை ஒழுங்குபடுத்தல்.
பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்திலிருந்து விடுபடுதல் இது, அமெரிக்காவில் உரிமைகோரல்களைச் சமர்பித்தவர்கள், மீளவும் கனடாவில் உரிமை கோருவதைத் தடுக்கும்.

மேலும் கனேடிய தேர்தல் தொடர்பாக செய்திகள்

தலைவர்கள் ஆங்கிலமொழி விவாதம் – அவதானிப்புக்கள் -நேரு

கனடிய தேர்தல் களம் 2019 இம்முறை பெரும்பான்மை ஆட்சியமையுமா?

சிரிப்பதுவும், அழுவதுமாக கனடிய தேர்தல் -ரதன்

நடைபெற இருக்கும் கனடிய சமஷ்டி தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம்- – தர்ஷினி உதயராஜா

இன்றைய நிலையில் கடசிகளின் வெற்றிவாய்ப்பு நிலவரம்