தேவையற்ற விதத்தில் வேட்பாளர்களை பயமுறுத்த கூடாது

20 ஆவது அரசியலமைப்பின் ஊடாக தேவையற்ற விதத்தில் வேட்பாளர்களை பயமுறுத்த சிலர் முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரிகில்லகஸ்கட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவசரமாக இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டமை எந்த காரணத்திற்காக என்பதில் சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே 20 ஆவது அரசியலமைப்பின் ஊடாக தேவையற்ற விதத்தில் வேட்பாளர்களை பயமுறுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.