இலங்கை மத்திய வங்கி அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை

கொவிட் – 19 இனால் பாதிக்கபட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வங்கிகளுக்கு வசதியாக இலங்கை மத்திய வங்கி அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது.

கொவிட் – 19 ஆல் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் முகமாக பல அதிவிசேட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவுசெய்துள்ளது.

வழமைபோன்று பெரும்பான்மையான கடன்பெறுநர்களால் கடன்களை திருப்பிச்செலுத்த முடியாமையால் செயற்படாக் கடன்களின் அதிகரிப்பில் உட்பட்ட உட்செல்லும் போக்கு, பொருளாதார செயற்பாட்டில் ஏற்படும் அசாதாரண இடையூறுகள் மற்றும் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட மூலதனத் தாங்கியிருப்புக்கள் தற்போதைய மற்றும் எதிர்கால திரவத்தன்மை நிலைகள் ஆகியவற்றால் வங்கித் துறையில் ஒட்டு மொத்த தாக்கு பிடிக்கும் தன்மையை கருத்திற்கொண்டு நாணயச் சபை இந்நடவடிக்கைகளை தீர்மானித்திருக்கின்றது.

அதற்கிணங்க, கொவிட் – 19 இல் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அவசர அடிப்படையில் உதவுவதற்கு வங்கிகளுக்கு கூடுதல் இடத்தை வழங்க மேல் குறிப்பிடப்பட்ட அதிவிசேட நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த நாணயச் சபை முடிவு செய்துள்ளது.