தற்போதும் அரசாங்கத்தின் உண்மையான தலைவர் ஜனாதிபதியே

19 ஆவது சீர்திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் முடிவுக்கு வந்தாலும் தற்போதும் அரசாங்கத்தின் உண்மையான தலைவர் ஜனாதிபதியே என அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.