சீனாவின் கடன்பொறி ராஜதந்திரம்

சீனாவின் கடன்பொறி ராஜதந்திரம்

பணப்பிரச்சினையால் தஜிகிஸ்தான் மற்றொரு முக்கிய சொத்தை சீனாவிற்கு விற்பனை செய்யவுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் கடன் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து மீளப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் வலியுறுத்தும் தருணத்தில் தஜிகிஸ்தான் மற்ற சொத்தை விற்பனை செய்யவுள்ளது. இலங்கை, மாலைதீவு முக்கிய உள்சார் கட்டுப்பாட்டை சரணடையச் செய்வதற்காக நிர்ப்பந்தம் ஏற்பட்டது அல்லது அந்நாடுகளை நிலையற்றதொரு திரும்ப கடன் கொடுக்கும் நிலைக்கு விட்டுச் சென்றுள்ளது.

68 நாடுகளில் 23 நாடுகள் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ முதலீட்டிலிருந்தும் அனுகூலத்தைப் பெற்றன. ஆயினும், அவை குறிப்பிடத்தக்களவுக்கு அல்லது அதிகளவு கடன் நெருக்கடி தொடர்பான நலிவான தன்மையில் உள்ளனவென்று கடந்த வருடம் சர்வதேச அபிவிருத்தி நிலையம் எச்சரித்திருந்தது. இந்நிலையம் வாஷிங்டனைத் தளமாகக் கொண்டதாகும். ‘தஜிகிஸ்தான், மாலைதீவு, பாகிஸ்தான், டிஜிபூட்டி, கிர்கிஸ்தான், லாவோஸ், மங்கோலியா, மொன்டிநீக்கோ’ ஆகிய எட்டு நாடுகள் குறிப்பாக நெருக்கடியிலுள்ளன என நிலையம் தெரிவித்துள்ளது.

கடன் பிரச்சினை கடன் கொடுத்தோராக சீனா மீது சாதகமற்றோராக சார்ந்திருக்கும் தன்மையை தோற்றுவிக்கும் கடன் தொகை அதிகரித்தலும் இருதரப்பு கடன்பிரச்சினையை முகாமைத்துவப்படுத்துவது தொடர்பான சீனாவின் வகிபாவமும் ஏற்கனவே ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ முதலீட்டை மேற்கொண்டுள்ள சில நாட்டில் உள்மட்ட இருதரப்பு பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன என அறிக்கை கூறுகிறது. ஆப்கானிஸ்தானின் வாக்கன் தாழ்வாரமானது நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒடுங்கிய நிலப்பரப்பாகும். சீன எல்லையைத் தொடுகிறது. பாகிஸ்தானிலிருந்து தஜிகிஸ்தானைப் பிரிக்கிறது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை வேறுபடுத்துகிறது. அங்கு வீதியொன்று நிர்மாணிப்பதில் முன்னேற்றம் காணப்படுகிறது. மக்கள் குடியரசின் பயனாளிகள் பற்றிய கவலைகள் குறித்து சீனாவின் உணர்வுபூர்வமற்ற தன்மையை இது விபரிக்கக் கூடுமெனத் தோன்றுகிறது. அவ்வீதியானது மத்திய ஆசியாவுக்கான தாழ்வாரத்தை வடக்கிலும் மற்றும் பாகிஸ்தானின் சீனர்களால் நிர்மாணிக்கப்படும் தெற்கின் அரபிக்கடல் துறைமுகம் கௌடாரையும் இணைக்கும். சீனாவின் உள்சார் கட்டமைப்பு – சக்தி மற்றும் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ தொடர்பான முன்முனைப்பு ஆகியவற்றின் முடியிலுள்ள ஒரு ஆபரணமாக விளங்கும்.

பூகோள அரசியல் முக்கியத்துவத்திலும் பார்க்க அப்பாதையானது உள்ளூர் தேவைப்பாட்டைக் கொண்டதென உறுதிப்படுத்துவதற்காக பணியாளர் அதனை நிர்மாணிக்கின்றனர். (இது அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்குகிறது.) அத்துடன், இப்பிராந்தியத்தின் மேய்ப்பர்களுக்கு (மலைச்சாரல்களில் செல்வதற்கு அனுசரணையாக) இது தொழில் வாய்ப்பை வழங்குகிறது. மானிடவியலாளர்களான டொப்பியால் மார்ஷல், ரில் மொஸ்டோ பிளாம்ஸ்கி ஆகியோரால் இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவிற்கு இது பூகோள அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் உரிமை கோருவதாக அமைந்துள்ளது.

மத்திய ஆசியாவுடன் வர்த்தகத்துக்கான அனுசரணையை மட்டும் இப்பாதை வழங்குவதாக மட்டுமன்றி கௌடாரிலிருந்து போக்குவரத்தை மேற்கொள்ளவும் இது உதவியாக அமைகிறது. ஆனால், குறுகிய குழாய் நிர்மாணம் மற்றும் கேபிள்களும் அங்கு அமைக்கப்படுகின்றன. சிலசமயம் அதிகளவு முக்கியமாக தஜிகிஸ்தானிலுள்ள இராணுவத் தளத்துடன் மற்றும் சீனர்களின் எல்லை கடந்த நடவடிக்கைக்காகவும் இது அமையக்கூடும். எல்லைகளுக்கப்பால் சீனாவின் இராணுவ அதிகாரத்தை படிப்படியாக ஏற்படுத்துவதற்கான படைநகர்வுக்கு அனுசரணையாகவும் இதனைப் பயன்படுத்தக்கூடியதும் முக்கியமாகும். குறிப்பாக, சீனாவின் குழப்பத்திற்குரிய வடமேற்கு மாகாணத்தின் இணைந்த பிராந்தியங்களில் ஜின் ஜியாங்கில் படைநகர்வைக் கொண்டிருக்கும் வசதி வழங்குவதாகவும் இருக்கும்.

வீதியின் இராணுவ முக்கியத்துவ சாத்தியப்பாடானது ரஷ்யாவுக்கும், சீனாவுக்குமிடையே தொழிலாளர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துமென அனுமானித்த விடயத்தின் நீடித்ததன்மையில் கேள்விகளை எழுப்புகிறது. மத்திய ஆசியாவில் ரஷ்யா பொறுப்புகளை கொண்டுள்ளது. அதேவேளை, சீனா பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துகிறது.

இருமுரண்நகையாக இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான், மலேசியா ஆகியவற்றின் உதாரணங்கள் மத்திய ஆசியாவிலுள்ள சீனர்களுக்கெதிரான உணர்வுடன் செல்லுமாகவிருந்தால் சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ முன்முனைப்புடன் தொடர்புடைய அபிவிருத்தியானது அச்சுறுத்தலாக மாற்றமடையும். ஜின்ஜியாங்கில் முஸ்லிம்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை மத்திய ஆசியாவில் சீனருக்கெதிரான உணர்வின் காரணத்தில் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. பூகோள அரசியல் தொடர்பான பரந்த அபிலாஷை, பிராந்திய பாதுகாப்பு கொள்கை போன்றவை அச்சுறுத்தலாக முடியும். அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுக கட்டுப்பாட்டை திரும்ப வழங்க வேண்டுமென இலங்கை வலியுறுத்தியிருந்தது.

இலங்கையின் கடன் கொடுப்பனவை குறைக்கும் அங்கமாக சீனர்களுக்கு துறைமுக கட்டுப்பாட்டை இரு ஆண்டுகளுக்கு முன் கையளித்தபோது கடன்பொறி இராஜதந்திரத்தை முன்னெடுப்பதாக சீனாவின் குற்றச்சாட்டில் பிந்திய குழந்தையாக இலங்கை உருவாகியது. உள்சார் கட்டமைப்பு திட்டத்திற்காக 2010 க்கும் 2015 க்குமிடையே 5 பில்லியன் டொலரை இலங்கைக்கு சீனா கடனாக வழங்கியிருந்தது. அம்பாந்தோட்டை அபிவிருத்தியும் இதில் உள்ளடங்கும். வட்டி 6.3% வரையாகும்.

ஒப்பீட்டளவில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தியின் கணக்கு வட்டி வீதம் 0.25% தொடக்கம் 3% வரையாகும். விழுமியமான கொள்கைக்கு மீளத்திரும்புவதே சிறப்பான சூழ்நிலையாக அமையும். உரிய விதத்தில் நாம் கடனைத் திரும்பச் செலுத்தவேண்டியுள்ளது. குழப்பமில்லாமல் நாம் ஏற்கனவே இணங்கிய விதத்தில் அதைச் செலுத்த வேண்டியுள்ளதென இலங்கை பிரதமரின் ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அதேபோன்று சீனக்கடனை மீள வடிவமைக்க நாடி வருவதாக இம்மாத முற்பகுதியில் மாலைதீவு வெளிவிவகார அமைச்சும் கூறியுள்ளது. ‘முன்னைய அரசு பெற்ற கடன் காரணமற்றவையாக இருப்பதுடன் எம்மை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. ஆனால், இராஜதந்திர வழிமுறையில் எம்மால் தீர்வு காண இயலுமென மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சாகித் கூறியுள்ளார். கடந்த வாரம் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமின் 5 வருடங்கள் சிறையும் 5 மில்லியன் அபராதமும் அவருக்கு தண்டனையாக விதிக்கப்பட்டது. பதவிக்கால ஊழலுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யாமினின் பதவிக்காலத்தில் சீனா காணிகளை அபகரித்து வந்துள்ளதாக சாகித்தின் அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

15.7 பில்லியன் டொலர் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’யுடன் தொடர்புடைய ரயில் திட்ட செலவினத்தை 3 இல் 1 ஆகக் குறைக்க இவ்வருட முற்பகுதியில் மலேசியா மீளப் பேச்சுவார்த்தை நடத்தியமை ஒரு அபூர்வ வெற்றியாகும். மேலும் ஒரு சலுகையாக வேலையாட்படையின் 70% த்தை மலேசியருக்கும் மற்றும் சிவில் பணியில் 40% த்தை மலேசிய ஒப்பந்தக்காரருக்கு வழங்கவும் சீனா இணங்கியது.

‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ முன்முனைப்புடன் சீன நிதியுதவித் திட்டத்தில் உள்ளூர் தொழிலாளரிலும் பார்க்க சீனர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக சீனா மீது திரும்பத் திரும்ப குற்றஞ்சாட்டப்படுகிறது. மூலப்பொருளை உள்ளூரில் பெறுவதிலும் பார்க்க சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மலேசியப் பிரதமரிலும் பார்க்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கம் இவ்விடயத்தில் சிறிய வெற்றியைப் பெற்றுள்ளது. 2018 இல் இம்ரான்கான் அரசாங்கம் அதிகாரம் வந்ததன்பின் இடைநிறுத்தப்பட்டிருந்த 100 திட்டங்களிற்கு புத்துயிரளிக்க சீன அழுத்தத்துக்கு அண்மையில் தலைவணங்கியிருந்தது. சீனா, பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை மேற்பார்வை செய்யும் புதிய அதிகாரசபை தலைவராக ஓய்வு பெற்ற லெப்டினன் ஜெனரல் நியமிக்கப்பட்டுள்ளார். சிபெக் அமைப்பு குழுக்கள் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ செயற்திட்டத்திற்காக ஒன்றிணைந்துள்ளன. இவ்விடயம் பாகிஸ்தான் அரசியல் சிக்கல் தொடர்பில் சீனாவின் சலிப்பு மற்றும் நாட்டின் இராணுவத்துடன் விடயத்தை கையாள முன்னுரிமைக்கு பிரதிபலிப்பதாகவுள்ளது. பாகிஸ்தானை ஒரு வெற்றியான கதையாக உருவாக்க சீனா தீர்மானமெடுத்துள்ளதென்பதை ஆய்வாளர் பரிந்துரைக்கின்றனர்.

தற்போது பாரிய மோதலாக இருப்பது சிபெக்கின் புகழ் பற்றிய விடயமாகும். அதனை ரட்சிப்பது பற்றி பெய்ஜிங் கவனமெடுக்கிறது. ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ முதலீடு வெற்றியானதென்பதை அவர்கள் காண்பிக்கும் தேவைப்பாடுள்ளது. அவை பாகிஸ்தான் பொருளாதாரத்தை குழப்பாது. இதை அவர்கள் செய்யாவிடின் முறைமையில் குறைபாடுள்ளது என்பதை இது பரிந்துரைக்கிறதென பாகிஸ்தான் மற்றும் சீன கல்விமானான அன்றுஸ்மோர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் நான் ஜாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக எஸ். ராஜரட்ணம் சர்வதேச கற்கை கல்லூரியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினராக கலாநிதி ஜேம்ஸ்.எம். டோர்சே விளங்குகிறார். இவர் ‘த ஏசியன் ஏஜ்’ இல் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

கலாநிதி ஜேம்ஸ்.எம். டோர்சே

ஏசியன் ஏஜ்