Atom Egoyan உலக சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை

   உலக சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை
நாங்கள்  என்றைக்குதே
கவனிக்கத் தவறிய இடம் வீடு
நிறைய திருத்தங்கள் தேவை
அங்கு ஒவ்வொரு வருடமும்
வெவ்வேறு மனிதர்கள்
ஓட்டைகளை அடைத்து விட்டு
தங்களது தூசுக்களை
நிரவிச் செல்வர்

Robert N. Watson – Winter in the summer house

அற்றம் எகோயன் ஒரு முழுமையான படைப்பாளி அல்ல, வர்த்தக சினிமாவின் கண்களுக்கு இவர் இவ்வாறே தெரிகின்றார். அற்றம் எகோயன்  ஒரு கலைத்துவமிக்க சுய விமர்சகர்.

கனடிய திரைப்படங்கள் என்றவுடன் பல விமர்சகர்கள் மத்தியில் உடன் நினைவுக்கு வரும் பெயர் அற்றம் எகோயன். இவரது பெயரின் முதல் பகுதி அணுகுண்டை மையமாகக் கொண்டது. எகிப்தின் முதலாவது அணுகுண்டு பரிசோதனை முயற்சியின் நினைவாக சூட்டப்பட்டது. இவரது பெற்றோர் எகிப்திய-ஆமேனியா. ஏகிப்தில் இருந்து இவர்களது குடும்பம் பிரிட்டிஸ் கொலம்பியாவிற்கு குடிபெயர்ந்தது. பின்னர் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டார். படிக்கும் காலங்களில் சாமுவேல் பெக்கெற் ஹரோல்ட் பின்ரர் போன்றோரது படைப்புக்களில் ஆர்வமேற்பட்டு தனது தேடலை வளர்த்துக் கொண்டார். சாமுவேல் பெக்கெட் பற்றி பல விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார். ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். (2006 க்குப் பின்னர்)
எங்களைப் போன்று ஒரு குடியேறியாக சிறிய வயதில் கனடாவில் குடியேறியவர். இவர் சந்தித்த துயரங்களை எங்களில் பலர் ; சந்தித்துள்ளோம். இவரது மூதாதையரும் எமது இனத்தைப் போல் படு மோசமான அழிவுகளை படுகொலைகளை சந்தித்துள்ளனர். “ஆர்மேனியா எனது கற்பனையானதல்ல. ஆனால் அநேகமாக புலம் பெயர் ஆர்மேனியர்களுக்கு அவர்களுடைய பூர்விகமான சொந்த நாட்டுடன் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்துகின்ற செயற்பாடொன்று மிகவும் தீவிரமாகப் புனரமைக்கப்பட்டுவிட்டது”(2) எனக் கூறியுள்ளார்.

இவர் ஆரம்பத்தில் ஆமேனிய கலாச்சாரத்தில் ஈடுபாடுகாட்டாதவர். பின்னர் தீவிரம் காட்டினார். தன்னை ஒரு ஆமேனியராக அடையாளப்படுத்துவதில் முன்னின்றார்.  ஒருவர் தன்னை ஒரு ஆர்மேனியராக அடையாளம் கண்டுகொள்வதில் வெட்கப்பட ஏதுமில்லை என்றும் அப்படி இன்னொரு அடையாளத்தையும் கொண்டிருப்பதில் மகிழ்வடைந்தார். இவரது துணைவியார் ஆர்சினே கன்ஜின் (Arsinee Khanjian) எகோயனின் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். இவரது முதலாவது படம் தயாரிக்கும் பொழுது ஒரு நடிகையாக சந்தித்தார். ஆதன் பின்னர் வாழ்க்கையிலும் இணைந்து கொண்டனர். திருமணத்தின் பின் இவர் மேலும் ஆமேனியராக தமது அடையாளத்தை தீவிரப்படுத்தினார்.
“என்னுடைய வரலாற்றுடனும் கலாச்சாரத்துடனும் பிணைந்த ஒரு கலைஞரைச் சந்தித்தேன். இது எனக்கு எப்பொழுதுமே, ஒரு வேளை நினைவில்  மனதில் என் கனவாகவே இருந்தது” என்று எகோயன் தெரிவிக்கின்றார்.
ஆர்சினே அரசியலில் முதுமானிப் பட்டம் பெற்றவர். நாடகவியலும் படித்தவர். இறுக்கமான கட்டுக்கோப்பான ஆமேனிய சமூகத்திலிருந்து வெளிப்பட்ட இவர், தனது கணவனின் படங்களில் பாலியல் காட்சிகளில் இயல்பாக நடித்துள்ளார். பாலியல் விடயங்களை அற்றம் வெளிப்படுத்துகின்ற விதத்தில் நான் எப்போதும் அசௌகரியமாக உணர்ந்து கொண்டதில்லை. ஒரு வேளை அது எனது ரகசியக் கற்பனைகளை நிறைவு செய்கின்ற ஒன்றாகவும் இருக்கக்கூடும். மூன்றாவதாக அவரது திரைப்பட மொழி அலாதியானது.

In an interview published in Cineaste magazine, Egoyan says:
“I find cinema is a great medium to explore ideas of loss, because of the nature of how an image affects us and how we relate to our own memory and especially how memory has changed with the advent of motion pictures with their ability to record the experience. Our relationship as filmmakers to those issues has changed radically over the past fifteen or twenty years. And people in our society have the instruments available to document and archive their own history. In my earlier films, I was exploring this in quite a literal way. But the ways in which our ability-and our need-to remember have been transmogrified comes very much into the spirit of this film as well.”[22]

முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தும் Ararat

ஒட்டமன் இராச்சியத்தில் 1299 ல் இருந்து கார்த்திகை 1,1922 வரை நீண்டிருந்த சாம்ராஜ்யம். இதனை துருக்கி சாம்ராஜ்யம் எனவும் அழைப்பார்கள். இந்த சாம்ராஜ்யத்தின் முக்கிய மதம் சுனிமுஸ்லீம். 1500 களில் பாக்தாத், கெய்ரோ, ஜெருசலேம் வரை பரந்திருந்தது இந்த சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் பல்வேறு இனக் குழுக்களும் வாழ்ந்தனர். ஆர்மேனியர் இந்த இனக் குழுக்களுள் ஒரு குழு. ஒட்டமன் சாம்ராஜ்யத்தின் விரிவில் உள்ளடக்கபட்ட பல பிரதேசங்களுள் ஆமேனியாவும் ஒன்று. 15ம் நூற்றாண்டில் ஆமேனியா இந்த சாம்ராஜ்யத்தில் உள்ளடக்கப்பட்டது அல்லது ஆக்கிரமிக்கப்பட்டது எனலாம். ஆமேனியர் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். இரண்டந்தர பிரசைகளாக நடாத்தப்பட்டார்கள். 1894-1896 க்குமிடைப்பட்ட பகுதியில் சுமார் மூன்று லட்சம் ஆமேனியர்கள் கொல்லப்பட்டனர். 1909ல் மீண்டும் சுமார் 15,000 பேர் கொல்லப்பட்டனர்.Young Turk Party  மத்திய குழுவால் 1916ல் திட்டமிடப்பட்டு ஆமேனியர் கொல்லப்பட்டனர். சித்திரை 24,1916ல் ஆமேனிய புத்திஜீவிகள் சுத்திவளைக்கப்பட்டு கொல்லப்பட்னர். மிகுதியாக இருந்த ஆமேனியர் வன்னியில் உள்ள முகாம்கள் போன்ற முகாம்களில் அடைக்கப்பட்டனர். அதை விட சுமார் இரண்டு லட்சம் ஆமேனியர் சிரியாவிற்கும், கிறீஸ்க்கும் அனுப்பப்பட்டனர். இது நடைபெற்ற காலம் முதலாவது மகாயுத்தம் நடைபெற்ற காலமாகும். ஆயிரக் கணக்கானோர் வீதிகளில் வெட்டி எறியப்பட்டனர். பலர் பசியால் இறந்தனர். இந்த படுகொலைகள் 1923 வரை நீடித்தது. இந்தப் பகுதியில வேலை பார்த்த அமெரிக்க அதிகாரிகள் இந்த படுகொலைகளை வெளி உலகிற்கு உணர்த்தினர். புல ஆங்கில பத்திரிகைள் முக்கிய செய்தியாக வெளியிட்டனர். இந்த படுகொலைகளை கண்டித்த துருக்கியர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த படுகொலைகளின் பிரதானமான நகரமாக வான் என்ற நகரம் திகழ்ந்தது. அமெரிக்க தலைமை வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய Dr.Clarence D.Ussher தலைமை இராணுவ அதிகாரியுடன் தொடா;பு கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தும் தோல்வியில் முடிவடைந்து விட்டது. இவர்பின்னால் தனது நூலான Ehyhd An American Physician in Turkey என்ற நூலில் இக் கொலைகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
முதலாம் உலக யுத்தத்தின் போது ஒட்டமன் சாம்ராஜ்யத்தின் ஆமேனியா பகுதியை ருசியா கைப்பிடித்தது. இது சோவியத் யூனியனின் தொடர்ச்சி வரை நீடித்தது. இதன் பின்னர் சுதந்திர ஆமேனிய குடியரசு தோன்றியது.
மூன்றாவது சந்ததியைச் சேர்ந்த கனடிய இயக்குனரான Neubahf ஆமேனியர்கள் மீதான துருக்கியரின் இன அழிப்பு படுகொலைகளை திரைப்படமாக்கியுள்ளார். Ararat என்ற இப்படம் கான்ஸின் முக்கிய படங்களுள் ஒன்றாக 2002ல் திரையிடப்பட்டது. சர்வதேசரீதயாக பெரும் அதிர்வை இப்படம் ஏற்படுத்தியது. ஊடக வலிமைக்கு இப்படம் ஒரு சான்றாகும். இன்று வரை துருக்கி இக் கொலைகளை மறுத்து வருகின்றது. இவ் வகையில் இப்படம் துருக்கி மீதான விமர்சனங்களை மீண்டும் சந்திக்கு கொண்டுவந்தது.
இயக்குனர் இப்படத்தை எடுத்துள்ள விதம் முக்கியமானது. நேரடியாக படு கொலைகளை எடுக்காமல், படுகொலைகளை பற்றி எடுக்கும் படமொன்றுக்குள் ஓர் படமாகவே இப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
Ararat இது ஒரு மலையின் பெயர். தெற்கு ஆமேனியாவில் அமைந்துள்ளது இந்த மலை.ஆமேனியரின் சரித்திரம், பண்பாடு, அடையாளம், மதம் போன்றவை கி.முனபிலிருந்தே இந்தப் பகுதிகளில் தோன்றிவிட்டன.
Filmmaker Edward Sorayan ஆமேனியா படுகொலைகளைப் பற்றிய படமொன்றை உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கின்றார். படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் வாழ்ந்த ஓவியர் Arshile Gorky என்ற ஓவியரைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு சரித்திர ஆய்வாளரை நியமிக்கின்றார். இவர் ரொரண்ரோவில் சரித்திர விரிவுரைகளை இந்த ஓவியர் பற்றி நிகழ்த்துகின்றார். இந்த ஓவியரின் “ஓவியரும் தாயும்” என்ற ஓவியம் பிரபல்யமானது. ஆமேனியா படுகொலைகளின் போது இறந்த தாயை நினைத்து ஓவியர் வரைந்தது. 1948ல் ஓவியர் தற்கொலை செய்கின்றார்.
இந்த ஓவியரின் முன்னால் மனைவி அனி ஒரு சரித்திர ஆய்வாளர். அனியின் குடும்பத்தில் பல குழப்பங்கள். அனியின் மகன் ரபிதனது அரைச் சகோதரி சிலியாவை காதலிக்கின்றார். அனியின் இரண்டாவது கணவனும் சிலியாவின் தந்தையும் இறந்தமைக்கு அனியே காரணம் என சிலியா குற்றஞ்சாட்டுகின்றாள். அனியின் முதல் கணவனும் (ரபியின் தந்தை) துருக்கிய சர்வதேச அதிகாரி ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது இறந்து விடுகின்றார்.
அனியின் மகன் ரபி படு கொலைகளை பற்றிய சில பதிவுகளை எடுப்பதற்கு துருக்கி செல்கின்றார். இது Sorayan எடுக்கும் படத்திற்கு மேலும் உதவும் என நினைக்கின்றார். இவர் ரொரண்ரோ திரும்பும் வழியில் ரொரண்ரோ விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்படுகின்றார். சுங்க அதிகாரி கேள்விகளால் துளைத்தெடுக்கின்றார். விடியோ பிரதிகளுக்குள் என்ன இருக்கின்றது என்பதை விமான நிலையத்திலேயே ரபியின் படம் பிடிக்கும் கருவியில் போட்டு பார்க்கின்றார். படுகொலைகள் திரையில் விரிகின்றன.
சுங்க அதிகாரயின் குடும்பத்தில் புதிய பிரச்சினைகள். அவரது மகன் ஒருபாலியலாளார். இதனை ஏற்று கொள்ள முடியாதுள்ளார். இந்த அதிகாரி.
இத் திரைப்படம் கான்ஸ்ல் திரையிட முன்னரே துருக்கிய அரசு, இப் படத்திற்கு எதிராக பிரச்சாரங்களை முடுக்கிவிட்டன. இப் படத்தில் இயக்குனரால் முன் வைக்கப்படும் ஹிட்லரின் வசனம் இது “Who remembers the extermination of the Armenians”. இயக்குனர் இப் படத்தை ஒரு புதிய தேடலுக்கான ஆரம்பமாக தொடங்கியுள்ளார். சரித்திரங்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். இதனால் தானோ தெரியாது கான்ஸில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துக் கூறிய துருக்கிய பத்திரிகையாளர் கூறிய கருத்து இது” இப்பொழுது இல்லாத துருக்கியர் செய்ததாக செய்யப்படும் பிரச்சாரம். உண்மை நிலை தெரிய எவரும் இல்லை”. இதனால் வன்னியிலும் அனைவரும் கொலை செய்யப்பட்டார்களோ?
படம் பல நிலைகளில் பதிவாகியுள்ளது. அனி தற்கொலை செய்து கொண்ட கவிஞரின் வாழ்க்கை வரலாறை எழுத முயற்சிக்கின்றார். சரோயன் படு கொலைகள் பற்றிய படமொன்றை எடுக்க முயற்சிக்கின்றார். ரபி உண்மை வரலாற்றை பதிவாக்க துருக்கி செல்கின்றார். சிலியா தனது தந்தையின் மரணத்தின் உண்மையை கண்டறிய முயற்சிக்கின்றார். சுங்க அதிகாரி மறந்த சரித்திரத்தின் தொடக்கமெதற்கு என ஆடசேபிக்கின்றார். இவை அனைத்தும் ஒரு தளத்தை நோக்கி நகருகின்றன. ஆமேனிய படு கொலைகளை மீள மக்கள் முன் விசாரணைக்குட்படுத்தல், துருக்கிய அரசு மீதான விமர்சனங்களை மீள தொடங்கல் இவையே இயக்குனரின் நோக்கம்.
இயக்குனர் தனது நோக்கம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.

“Did the Turks say sorry?”

Since the Turks have never admitted that the massacres and forced deportations amounted to genocide — they acknowledge only that many died on each side in World War I — Egoyan didn’t know what to say. “I realized that by telling him the answer, the trauma of denial that I had been raised with would be transferred to him,” says Egoyan. “I understood that I wanted to talk about how this trauma lives on today.”
http://www.time.com/time/magazine/article/0,9171,901030428-444961,00.html

“That is the determining issue of why I made the film. It wasn’t to ascertain the fact of the genocide…..I think that we have to able to find a way to stop talking about this as a film of the American genocide. It is a film about living with the offers of the denial of that event into the present”

இப் படம் இவரது வேதனையை பூர்த்தி செய்துள்ளது. நேற்று இன்று நாளை என வெவ்வேறு காலப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களையும் இப் படம் பதிவு செய்துள்ளளது. ஆர்மேனிய படுகொலைகள் எடுக்கப்பட்ட விதம் கண்கலங்க வைக்கின்றது. வண்டிலின் மேற்பகுதியல் ஒரு பெண்ணை துருக்கிய இராணுவம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துகின்றது. வண்டியின் கீழ் பகுதியில் தொங்கும் தாயின் கைகளை பிடித்த வண்ணம் ஒரு சிறுமி. ஒரு மாதுளம் பழத்தை உடைத்து ஒவ்வொரு முத்தை ஒவ்வொரு நாளும் உண்டு பசியாறும் தாய் என படம் திட்டமிட்ட படுகொலைகளயும் துயரங்களையும் அப்பட்டமாக பதிவு செய்துள்ளது.

Calender

இவரது படங்களில் சிறந்த  படம் இது எனலாம். மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம். ஆமேனியாவிற்கு கணவனும் மனைவியும் தேவாலாயங்களைப் படம் எடுப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் செல்கின்றனர். இவர்களுக்கு வழிகாட்டியுமாக ஒரு காரோட்டி. இறுதியில் காரோட்டியை மனைவி காதலித்து ஆமேனியாவில் தங்கிவிடுகின்றார்.
கனடா வரும் கணவன் ஒவ்வொரு நாளும் இரவு உணவுக்கு பெண்களை அழைக்கின்றார். இவர்கள் சாப்பிடத் தொடங்க ஒரு தொலைபேசி எடுக்க வேண்டும் என இப் பெண்கள் போவார்கள். வேற்று மொழியில் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு பெண்ணும் இதையே செய்வார்.
இப் படம் மூன்று பிரதான பாத்திரங்களை கொண்டுள்ளது. கணவன் இவர் ஆமேனிய அடியைக் கொண்டவர். மொழி பேசத் தெரியாது. இவரது மனைவிக்கு மொழி பேசத் தெரியும். இவர் கனடாவில் உள்ளார். காரோட்டி உள்ளூர் பிரசை. இப் படத்தில் கணவன் மனைவியாக எகோயனும் அவரது மனைவியுமே நடித்திருப்பார்கள். இயக்குனர் இதில் வரும் கணவனை ஒத்தவர். அதே போன்று அவரது மனைவி படத்தில் வரும் மனைவியைப் போன்றவர். அதாவது அவருக்கு ஆமேனிய மொழி பேசத் தெரியும்.
ஆமேனியாவில் எடுக்கப்பட்ட பகுதிகள் ஒரே பகுதிகள் போன்று தான் தோற்றமளிக்கும். தேவாலயங்கள், கோட்டை என்பளவே காட்டப்படும். ஆமேனியா மக்களை துருக்கியர் கொன்றொழித்த போது ஓரளவிற்கு தேவாலயங்களும் கோட்டையுமே காப்பாற்றியது. படத்தின் ஆரம்பத்தில் கணவனின் வீட்டில் ஒரு காலண்டர் தொங்கும். 12 மாத தாள்களிலும் தேவாலயப் படங்களே காணப்படும். இதை படம் பிடிக்கவே இவர்கள் ஆமேனியா சென்றார்கள்.
அற்றம் எகோயன் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதற்கு இப் படம் சிறந்த உதாரணம். மிகக் குறைந்த செலவில் சில இடங்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் ஒரே மாதிரியான படிமங்களில் இப் படத்தை படைத்துள்ளார். ஆமேனியாவில் எடுக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகளில் கணவனின் குரலையே கேட்கலாம். பல சமயங்களில் அதிகாரத் தன்மையுடன் வெளிப்படும். அதே கணவன் மனைவி பிரிந்த பின்னர் வீட்டுக்கு பெண்களை அழைத்து தனது துயரங்களை பகிரும் பொழுது ஒவ்வொரு பெண்ணும் தொலைபேசி எடுக்க வேண்டும் என்று செல்வாள். இவரது படங்களின் தனித் தன்மையே சில படிமங்களை மீண்டும் மீண்டும் படமாக்கி பாத்திரங்களிடையே உள்ள இடைவெளியை உணரச் செய்தல். இங்கும் ஒவ்வொரு பாத்திரமும் தங்களது வித்தியாசமான உலகில் சஞ்சரிக்கின்றார்கள். இறுதியில் இயக்குனர்-கணவன் “If you see her, say Hello” என்பதுடன் முடிவடைகின்றது. மனைவியன் முடிவு ஏற்றுக் கொள்ளக்கூடியது, வரவேற்கத்தக்கது என்பதை துயரமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
இப் படம் உங்களை ஒரு வித்தியாசமான கலைபூர்வமான உலகிற்கு இட்டுச் செல்லும். ஒரு சிறந்த abstract படமிது.
இப் படம் போன்று எமது சிதைக்கப்பட்ட தமிழினத்து நாட்காட்டியும், அவ்வழிவுகளிலிருந்து உருவாக்கலாம்.நாளைய சந்ததிக்கு, இது ஒரு வழிகாட்டுதலாக அமையலாம்.