கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக வீதியின் ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பராமரிப்பு பணிகள் இடம்பெறும் பகுதிகளில் வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டு அளவுக்கு பேணி பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இம்மாதம் 28 ஆம் திகதி வரை அதிவேக வீதியில் இவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிவேக வீதி செற்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.