கொன்சவேற்றிவ் கட்சி வேண்டவே வேண்டாம்.

கொன்சவேற்றிவ் கட்சி வேண்டவே வேண்டாம்.
ரதன்கடந்த 2018 ஒன்ராரியோ மாநிலவைக்கு, தீடீரென கொன்சவேற்றிவ் கட்சித் தலைவரான டக் போர்ட் மாநில முதல்வாரக தேர்வானார். தமிழை தாய் மொழியாகக் கொண்ட  வாக்காளர்கள், தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரப்படுத்தப்பட்டு, இரு தமிழ் வேட்பாளர்கள் மாநில பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். 2018க்கு முன்னர் ஆட்சியிலிருந்த லிபரல் கட்சி ஊழல் ஆட்சி நடாத்தப்பட்டது என பிரச்சாரப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக கொன்சவேற்றிவ் கட்சியை மக்கள் ஆட்சி பீடம் ஏற்றினர்.

மக்களுக்கான கட்சி என பிரச்சாரத்தில் கூவிய கொன்சவேற்றிவ் கட்சி, பழைய படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகிவிட்டது.
ஏற்கனவே பல உயர் பாடசாலை மாணவர்கள், கல்வியைத் தொடராமல் வீதிக்கு வருகின்றனர். அண்மையில் ஒன்ராரியோ அரசால் ஏற்படுத்தப்பட்ட கல்வி மாற்றங்கள், நிதிக் கட்டுப்பாடுகள் இதனை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
கொன்சவேற்றிவ் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் சமூக நலனற்றவை. அதே சமயம் தனியார்மயப்படுத்தலுக்கான முன்னீட்டுத் திட்டங்களாக உள்ளன. நவ தாரளவாதத்தை ஒன்ராரியோவில் நிலை நிறுத்த மேற்கொள்ளப்படும் திட்டங்கள். இதன் எதிர் விளைவுகள் பற்றிய சிந்தனையற்ற செயற்பாடுகளாக உள்ளன. autism உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அதிகளவு பணத்தை இனிமேல் செலவிட வேண்டிவரும். இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் ஒன்ராரியோ மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

டக் போர்ட்டின் செல்வாக்கு மிக, மிகக் குறைந்து காணப்படுவதனை அபிப்பிராய கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ரொரன்ரோ Raptors வெற்றி ஊர்வலத்தில் கலந்து கொண்ட டக் போர்ட்க்கு மக்கள் கொடுத்த வரவேற்பு மிக மோசமானது. அதே நிகழ்வில் கலந்து கொண்ட ஜஸ்ரின் ரூடோ, ஜோன் ரொரி ஆகியோரை மக்கள் வரவேற்றனர். மேலும் அபிப்பிராய கணிப்புக்கள் ஒன்ராரியோ கொன்சவேற்றிவ் கட்சியின் செல்வாக்கு லிபரலை விட சற்று குறைந்திருப்பதனைக் காட்டுகின்றது.

இதனைச் சரி செய்ய மேலும் மூன்று வருடங்கள் உள்ளன. ஆனால் டக் போர்ட் தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களை பதவியிறக்கம் செய்துள்ளார். ஒரு வகையில் இது டக் போர்ட்க்கு நன்மையளிக்கலாம். அதே சமயம் டக் போர்ட்க்கு ஒன்ராரியோ கொன்சவேற்றிவ் கட்சிக்குள்ளும் செல்வாக்கு குறைந்துள்ளது. இவருக்கு எதிரானவர்களே இந்த முக்கிய அமைச்சர்கள். கொன்சவேற்றிவ் கட்சித் தலைமைப் போட்டியில் இவரை ஆதரிக்காதவர்கள். அவர்களது நடவடிக்கை தன்னை பாதித்துள்ளது என உலகிற்கு காட்டும் ஒரு செயற்பாடே இது எனத் தெரிவிக்கும் முயற்சியே இது. எது எப்படியிருப்பினும் இறுதி முடிவு எடுக்க வேண்டிய தலைவர் டக் போர்ட். இவர் ஒரு பொழுதும் மக்கள் நலனை கருத்திற் கொள்ளாதவர். மறு புறும் பதவிக் குறைப்புக்குள்ளான அமைச்சர்கள் மேலும் இவருக்கு எதிராக செயற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

மத்திய லிபரல் அரசுக்கு, ஒன்ராரியோவில் அதிக செல்வாக்கு அற்ற கொன்சவேற்றிவ் அரசு அமைந்திருப்பது லாபமான விடயம். மத்திய கொன்சவேற்றிவ் தலைவரை மக்கள் நன்கறியவில்ல. பிரசித்தமானவரல்ல. மத்தியில் கொன்சவேற்றிவ் கட்சி வெற்றி பெறவேண்டுமாயின் கியுபெக்கிலும், ஒன்ராரியோவிலும் அதிக ஆசனங்கள் பெற வேண்டும். கியுபெக்கில் லிபரலுக்கு செல்வாக்கு அதிகம். அங்கு கொன்சவேற்றிவ் கட்சி ஒரு சில ஆசனங்களைப் பெறலாம். ஒன்ராரியோவில் கடந்த யூனுக்கு முதல் இருந்த செல்வாக்கு இப்பொழுது இல்லை. அதற்கு பிரதான காரணம் டக் போர்ட்டின் அரசு.

தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும், என கொள்கைகளை கவனியாது வாக்களித்ததன் விளைவு, பல தமிழர்களுக்கு வேலை இழப்பு, பல முதியோர், இளைஞர்கள், மாணவர்கள் பாதிப்பு. ஒட்டு மொத்தத்தில் மத்திய வர்க்க மக்கள், வறுமைக் கோட்டினை அண்டி வாழும் மக்களின் அன்றாட வாழ்வே சிக்கலாகிவிட்டது. அவர்களின் உணவு, உடை, உறையுள், கல்வி போன்ற அனைத்தையும் கேள்விக் குறியாக்கிவிட்டது. ஒரு தடவை சிந்திப்போம். இனிமேலாவது மக்கள் நலன் திட்டங்களை முன்வைக்கும் கட்சிக்கு வாக்களிப்போம்.

வீதிக்கு பெயரிடுவதல்ல முக்கியம:;, வீதிக்கு மக்கள் வரமால் பாதுகாப்பதே முக்கியம். அது எமக்கும் விளங்கவில்லை. அவர்களுக்கும் விளங்கவில்லை.

பதவி மாற்றத்துக்குள்ளான அமைச்சர்கள்

• Vic Fedeli   நிதியிலிருந்து பொருளாதார அபிவிருத்தி துறைக்கு (Finance to Economic Development.)
• Lisa Thompson  கல்வியிலிருந்து அரச, நுகர்வோர் துறைக்கு( Education to Government and Consumer Services).
• Lisa MacLeod    சமூக சேவைகள், குழந்தைகள் நலன் துறைகளிலிருந்து உல்லாசத்துறை மற்றும் விளையாட்டுத் துறைக்கு ( Children,Community and Social Services to Tourism, Culture and Sport.)
• Merrilee Fullerton  கல்வியகங்களிருந்து, நீண்ட கால நோயாளர் பராமரிப்புக்கு – இது சுகாதார அமைச்சிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. (Training, Colleges and Universities to Long-term Care, which was previously part of the Ministry of Health.)
• Michael Tibollo  உல்லாசத்துறை மற்றும் விளையாட்டுத் துறையிலிருந்து, மனநோய் இணை அமைச்சராக (Tourism, Culture and Sport to a new junior portfolio of Associate Minister of Mental Health and Addictions.)
• Bill Walker  (அரச, நுகர்வோர் துறையிலிருந்து சக்தி வளத்துறை இணை அமைச்சராக) Government and Consumer Services to a new junior portfolio of Associate Minister of Energy.

.
ஓன்ராரியோ அரசால் நிதிக் குறைப்பு அல்லது நீக்கப்பட்ட துறைகள்

மாநில அரசாங்க ஊழியர்களின் வேதன அதிகரிப்பு அடுத்த மூன்று வருடங்களுக்கு ஒரு வீதமாக இருக்கும். ஆனால் பணவீக்கம் இரண்டு வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக கொடுப்பனவைப் பெறுபவர்களின் பிள்ளைகளுக்கு தலா ஒவ்வொரு பிள்ளைக்கும் வழங்கப்படும் மாதாந்த 230 டொலர்கள், இனிமேல் வழங்கப்படாது.
உயரமான கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு மாநகரத்தின் அனுமதி பெறப்படவேண்டும். இனிமேல் உயரங்கள் வானத்தை தொடலாம்
மாநகரங்களுக்கு வழங்கப்படும் நிதி அதிகளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் பராமரிப்பு, அத்தியாவசிய சேவைகள், அம்புலன்ஸ் சேவை, சுகாதார சேவைகள் பாதிக்கப்படும்.

ஒன்ராரியோ ஆர்ட்ஸ் கவுன்சிலுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பட்ட மருத்துவ ஆய்வுகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் அதிகளவு குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தால் 2025ம் ஆண்டுக்குள் 50 மில்லியன் மரங்கள் நடப்படவேண்டும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கென நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் நடைமுறையிலிருந்தது. இத் திட்டம் கைவிடப்பட்டது.

நீங்கள் கனடாவிற்கு வெளியே செல்லும் பொழுது, உங்களுக்கு நோய் ஏற்பட்டு, அதற்கு அந்த நாட்டில் நீங்கள் வைத்தியரையோ, வைத்தியசாலையையே நாடியிருந்தால், அதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்தியிருப்பீர்கள். வழமையாக நீங்கள் செலுத்திய பணத்தை ஒன்ராரியோ அரசு முழுமையாகவோ, பகுதியாகவோ மீள உங்களுக்கு வழங்கும். இத் திட்டம் நீக்கப்பட்டுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளுக்கு சுகாதார சேவைக்கு வழங்கப்படும் நிதி ஒரு பில்லியனால் குறைக்கப்படும். இதனால் பல மருத்துவ சேவைகளுக்கு நீங்கள் உங்கள் பணத்தை வழங்கவேண்டி வரும். இது தனியார் மருத்துவ சேவையை அதிகரிப்பதற்கான வழிவக்குப்பதற்கான முதல் படி.

ஒன்ராரியோவில் LHIN   லின் எனப்படும் 14 மருத்துவ தாதி சேவைகள் வழங்கும் நிறுவனம் உள்ளது. மருத்துவ மனையிலிருந்து நீங்கள் வெளியேறும் பொழுது, நீங்கள் வழமை போல் நடமாடுவதற்கான சேவைகளை இந் நிறுவனம் வழங்கிவருகின்றது. அத்துடன் முதியோர் நலனில் இந் நிறுவனம் அதிக அக்கறை காட்டி வருகின்றது. பல தமிழ் முதியோர் இந் நிறுவனத்தால் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர். பல தமிழர்கள் இந் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இந் நிறுவனத்துடன் தொடர்பு பட்ட நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர். (Ontario health minister Christine Elliott tabled new health legislation—called the People’s Health Care Act—which proposes the dissolution of 14 LHINs (which oversee home care and manage nursing home wait-lists at the local level) and the merger of six health agencies—) இவர்களுக்கு வழங்கப்படும் நிதி அதிகளவில் குறைக்கப்படவுள்ளது. இதனால் பல முதியோர் தனியார் சேவைகளை நாட நிர்ப்பந்திக்கப்படவுள்ளார்கள். பல சேவைகள் நிறுத்தப்படவுள்ளன. பலர் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள்.

லிபரல் அரசு குறைந்த வருமானாம் பெறும் பெற்றோருக்கான பிள்ளைகள் பல்கலைக் கழகத்துக்குச் சென்றால், அவர்களுக்கு பல நிதியுதவிகளை வழங்கிவந்தது. கல்விக் கடனில் 50 வீதத்தை இலவசமாக வழங்கியது. இச் சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கான கல்விக் கடனையும் அதிகளவு குறைத்துள்ளது. இதனால் பல மாணவர்கள் அடுத்த ஆண்டிக்காற்கான கல்விக் கட்டணத்துக்கு பெற்றோரை நாட வேண்டியுள்ளது. மாணவர்கள் 21 வயது வரை, கல்விக் கடன் வழங்குவதற்கு பெற்றோர் வருமானம் கணக்கிலெடுக்கப்படும்.

ஒன்ராரியோவில் விசேட குழந்தைகளின் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. உயர் பாடசாலைக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் வேலை இழக்க வேண்டிவரும். வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

ரொரன்ரோ கல்விச் சபை 68 மில்லியன் அரச நிதியை இழந்துள்ளது. இதனால் ரொரன்ரோ மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்
குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் குழந்தைகள் மற்றும் 25 வயதுக்குட்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இது வரை காலமும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இனிமேல் அது இல்லை

ஓன்ராரியோ நூலகங்களுக்கான நிதி 50 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் புதிய தமிழ் நூல்கள் பெறமுடியாது. பல நூலக மாணவர்களுக்கான பயிறசிகள் நிறுத்தப்படும். கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு குறைந்த செலவில் வழங்கப்படும் விசேட பயிற்சிகள் குறைக்கப்படும்.

யூன் ஆறாம் திகதியுடன் பீர் ஸரோருடனான பத்து வருட ஒப்பந்தம் அகற்றப்படுகின்றது. விரைவில் உங்களது வீட்டுக்கு அருகில் உள்ள பல-சரக்கு கடையில் பீர் வாங்கலாம். பீர் ஸரோருடனான பத்து வருட ஒப்பந்தத்தை முறிப்பதன் மூலம், இந் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டொலர்களை ஒன்ராரியோ அரசு வழங்க வேண்டி வரும். பீர் ஸ்ரோர் – Labatt, Molson ,  Sleeman  ஆகிய மூன்று மிகப் பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமானது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க சேம்பர் ஒப் கொமேஸ் கண்டம்தெரிவித்துள்ளது.

ஓன்ராரியோவின் முன்னால் நிதி அமைச்சர் Vic Fedeli  இதன் மூலம் பீரின் விலை குறையும். கியுபெக்கில் பீரின் விலை ஒன்ராரியோவை விட 8.3 சதங்கள் குறைவு எனத் தெரிவித்திருந்தார்.

பீர் விற்பனையை மூலைக்கு மூலை அதிகரிப்பது ஆரோக்கியமற்ற செயற்பாடு என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். உண்மையும் அதுவே.
மனநோயாளிகளுக்கான நிதி மிக அதிகளவு குறைக்கப்பட்டுள்ளது
இவற்றை விட
Cancelled:
Funding for three university satellite campuses
Labour reform (Bill 148)
Rent control in new buildings, three provincial watchdog positions and more
The Basic Income Project
Changes to the sex-ed curriculum
The cap-and-trade program
The Green Ontario Fund
$100 million in funding for school repairs

மேலதிக விபரங்களுக்கு

https://www.chatelaine.com/living/politics/doug-ford-cuts/
https://www.nationalobserver.com/2019/06/07/news/heres-everything-doug-ford-government-cut-its-first-year-office