அமெரிக்காவில் உச்சம்: ஒரே நாளில் 60, 500 பேருக்கு தொற்று

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக வல்லரசு நாடான அமெரிக்கா கதி கலங்கி வருகிறது. அமெரிக்கா முழுவதையும் ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. கடந்த ஒருவார காலமாக அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 41 மாகாணங்கள் அதிகபட்ச கொரோனா பதிப்பை எட்டி வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக  ஒரே நாளில் 60,500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வேறு எந்த நாட்டிலும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.