கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இன்றைய தினம்  மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

அதன்படி, இலங்கையில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 1030 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

417 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது