ரஷ்யாவை விரட்டும் கொரோனா – 9 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7.42 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்குகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 4945 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,97,599 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 15,131 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.