வர்த்தக சம்மேளனத்தின் தொழில் முனைவோர் விருதுக்கான மனுத் தாக்கல் ஆரம்பம்

கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 22 ஆம் ஆண்டு தொழில் முனைவோர் விருதுக்கான மனுத் தாக்கல் ஆரம்பம்

கனடாவில் வாழும் தமிழ் மக்களின் வணிக ரீதியான சாதனைகளை அங்கீகரித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் தொழில் ரீதியான பல தரப்பட்ட விருதுகளை வழங்கி கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனம் தொழில் முனைவோரை கௌரவப்படுத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான 22 வது தொழில் முனைவோர் விருது குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. கனடிய தொழில் முனைவோரிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்களும், விதிமுறைகளும் கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில்
1) சிறந்த தொழில் முனைவோர் விருது
2 ) பெண்களுக்கான சிறந்த தொழில் முனைவோர் விருது
3) சிறந்த இளையோர் தொழில் முனைவோர் விருது
4) சிறந்த விளம்பர பிரச்சார விருது,
5) தலைசிறந்த தொழில் நெறிஞர் விருது
6) தலைசிறந்த சமூக சேவையாளர் விருது
ஆகியவை வழங்கப்பட உள்ளதாக கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்கான தகுதிகளும் வெளியாகியுள்ளன.
Nominations are open for CTCC’s 2020 Entrepreneur Awards Gala!
Applications Must be Received by Feb 24, 2020
For Nomination Package click here  / விண்ணப்ப படிவங்களை தரையிறக்கம் செய்ய 
ctcc.ca/nomination2020.pdf
சிறந்த தொழில் முனைவோர் விருதுக்கான தகுதிகள்
· குறைந்த பட்சம் 4 வருடங்கள் தொழில் துறையில் இருந்திருக்க வேண்டும்.
· நிறுவனத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படும் .
· தொழிலில் ஏற்றத் தாழ்வு நிலைகள் இருந்த போதிலும் கூட ஒட்டுமொத்தமாக நிலைப்புத்தன்மையுடன் தொழில் வளர்ச்சி கண்டிருக்க வேண்டும்.
· விண்ணப்பதாரர் அதே தன்மையுடைய பிற தொழில்நிறுவனங்களைக் காட்டிலும் .முதலிடத்தில் இருக்க வேண்டும்.
· தொழில் முனைவோர் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராய் இருத்தல் அவசியம்.
· நிறுவனப் பணியாளர்கள் தரமான வாழ்க்கையையும்  , சிறந்த பணியாற்றும் சூழலையும் பெற்றிருக்க வேண்டும்.
· நிறுவனப் பணியாளர் மற்றும் உரிமையாளரின் பொது நலச் சேவையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.
· விண்ணப்பதாரர் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
· தொழில் வியாபார யுக்திகளைப் பயன்படுத்துவதில் புதுமைக்கான சான்றுகள் கணக்கில் எடுக்கப்படும்.
· சமூகப் பார்வை அவசியம்.
சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது

சிறந்த இளையோர் தொழில் முனைவோர் விருது

· குறைந்த பட்சம் 2 வருடங்களாவது தொழில் துறையில் இருந்திருக்க வேண்டும்.

· தொழில் அல்லது சேவைக்கு நல்ல சந்தை நிலவரம் இருக்க வேண்டும்.
· நிறுவனத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படும் .
· தொழில் வியாபார யுக்திகளைப் பயன்படுத்துவதில் புதுமை.
· தொழில் முனைவோர் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராய் இருத்தல் அவசியம்.
· சமூகப் பார்வை அவசியம்.
· 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.( கடந்த வருடம் இளைய தொழில் முனைவோருக்கான வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும் கூட அந்த வயதுக்குள் சிறந்த தொழில் முனைவோரை தெரிந்தெடுப்பதில் சம்மேளனத்திற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டதால் 40 வயதுடைய ஒருவருக்கே விருது வழங்கப்பட்டது. அதனை நினைவில் வைத்தே இந்த ஆண்டு வயது வரம்பு அதிகரிக்கபப்ட்டுள்ளது)
சிறந்த விளம்பர யுக்திக்கான விருது
· குறைந்த பட்சம் 2 வருடங்களாவது தொழில் துறையில் இருந்திருக்க வேண்டும்.
· தனிப்பட்ட தொழில் அல்லது சேவை
· வாடிக்கையாளர்களைக் கவர தனித்தன்மையுடன் கூடிய முறைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
· தொழில் வியாபார யுக்திகளைப் பயன்படுத்துவதில் புதுமையை கையாண்டிருக்க வேண்டும்.
· தொழில் விளம்பரங்களில் ஐந்தில் மூன்று இணையதளங்கள், தொலைகாட்சி, வானொலி, அச்சடிக்கப்பட்ட சீட்டுக்கள் வாயிலாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.
· ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
தலைசிறந்த தொழில் நெறிஞர் விருது
· நிர்வாகிகளே விண்ணப்பதாரரை முடிவு  செய்வார்கள்.
· தனித்தன்மைக்கான சான்றுகள் காட்டப்பட வேண்டும்.
தலைசிறந்த சமூக சேவையாளர் விருது
· நிர்வாகிகளே விண்ணப்பதாரரை முடிவு  செய்வார்கள்.
· சமூகத் தலைவராக பணியாற்றி பல அமைப்புக்களுக்கு உதவி புரிந்திருக்க வேண்டும்.
 விதிமுறைகள் 
1 . தொழில் முனைவோர் தங்கள் தொழிலின் கனடிய செயற்பணிகளை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
2 . தகுதியான தொழில் முனைவோர் விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை கனடிய தமிழ் வர்த்தக அமைப்பினால் அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவினருக்கு மட்டுமே உண்டு.
3 .  விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கள் தொழில் குறித்த அனைத்து ரகசியங்களும் நிச்சயமாக பாதுகாக்கப்படும்.
4 . தேவைப்படின் தொழில் குறித்த கூடுதல் தகவல்களையும் தெரிவுக்குழுவினர் கேட்கும் போது அளிக்க வேண்டும்.
5 . விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மை என்பதனை விண்ணப்பதாரரே உறுதிப்படுத்த வேண்டும்.
6 . பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்களை தபால் மூலம்  கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ஆன்லைன் மூலம் CTCC இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
7.  தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களில் “private & confidential” என குறிக்கப்பட்டிருக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் பெப்ரவரி 24, 2013.  பிற்பகல் 5 மணி வரை மட்டுமே.
8 .  கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் அமைப்பினால் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவினருக்கு விண்ணப்பிக்கும் தகுதி கிடையாது.
9. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி :

CTCC அலுவலகம் : 5200 Finch Ave E, Scarborough, ON M1S 4Z3

சாந்தா பஞ்சலிங்கம் : 416-200-5470,
தீபன் ராஜ் – 416 629 2444

இ -மெயில்:   info@ctcc.ca

feb_web_ekuruvi_2020