வவுனியா பண்டாரிகுளத்தில் டெங்கு ஒழிப்பு விஷேட நடவடிக்கை

வவுனியா நகர் பகுதியில் பெருக்கெடுத்துள்ள டெங்கு நுளம்புகளை இல்லாது ஒழிக்கும் செயற்றிடத்தினை வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினருடன் இணைந்து பண்டாரிகுளம் சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

24 டெங்கு நோயாளர்கள் வவுனியாவில் இனங்காணப்பட்டதனையடுத்து வவுனியா முழுவதும் வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையினர் பல்வேறு தரப்பினருடன் இணைந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் இன்றையதினம் (13.10.2019) உக்கிளாங்குளம் பகுதியில் டெங்கு நோய் பரவும் வகையில் காணப்படும் இடங்கள் சோதனை செய்யப்பட்டதுடன் அவற்றை அழிக்கும் நடவடிக்கையும் முன்னெடுத்தனர்.