இராஜாங்க அமைச்சர்களுக்கு பல பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன

இராஜாங்க அமைச்சர்களுக்கான நிறுவனங்கள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினாலும் அவர்களுக்கு பல பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தமது கடமைகளை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவை அமைச்சர்களின் முழு ஒத்துழைப்பும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வேறு வேறான செயற்பாடுகள் உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.