போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

கொதட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டலந்தஹேன பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (09) இரவு 7.45 மணி அளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஐஸ் 100 கிராம் 450 மில்லி கிராம், கஞ்சா 2 கிலோ 20 கிராம் மற்றும் போதை மாத்திரைகள் 50 உம் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ரிச்சட் டெமியன் டெகர் எனும் நபரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.