தெரிவுக் குழு முன் ஆஜரானார் தயாசிறி ஜயசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு கூடியுள்ளது.

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு முதல் சாட்சியாளராக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆஜராகியுள்ளார்.

தற்போது அவர் தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றார்.

இதேவேளை இன்றைய தினம் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ரிவி தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் 360 நிகழ்ச்சியில், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அது தொடர்பிலேயே அவர் சாட்சியம் வழங்குவதற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அன்று குண்டு வெடிக்காதது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

பொறுப்பு வாய்ந்த ஊடகம் என்ற அடிப்படையில் அவர்களும் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அன்று குண்டு வெடிக்காதது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவை சரியான முடிவுகளையும் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.