கஜகஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டரில் 5.5 ஆக பதிவு

கஜகஸ்தான் நாட்டின் கேகென் நகரில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் அல்மேட்டி பகுதியில் இருந்து 140 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில்  மையம் கொண்டு உள்ளது.  எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.