இயற்கை விவசாய வாரம் ஜனவரி 08 முதல் 14 வரை

இயற்கை விவசாய வார செயற்பாடுகள். 8 – 14 ஜனவரி 2019
புதிய வெளிச்சத்தின் அனுசரணையுடன் இயற்கைவழி இயக்கத்தினால் ஜனவரி 08 முதல் 14 வரையான காலப்பகுதியானது இயற்கைவழி விவசாய வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வாரத்தில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் இயற்கைவழி ஆர்வலர்களின் பங்கெடுப்புடன் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தபடவுள்ளன.
08.01.2018 (செவ்வாய்) அன்று மன்னாரில் தட்சணமருதமடுவில் பண்ணைப் பெண்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் காலை 9 மணி முதல் 1 மணிவரை நிகழ்வு இடம்பெறவுள்ளது. நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு திரு. சிவதாஸ் 077 165 0424. பாடசாலை மாணவர்களிற்கான விழிப்புணர்வு, உள்ளூர் விவசாயிகளுடனான கலந்துரையாடல், மரநடுகை நிகழ்வு, புதிய ஆண்டில் காய்கறிப் பயிரிடலை மீள ஆரம்பித்தல் என்பன நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும்.
09.01.2018 (புதன்) அன்று வவுனியாவில் நிகழ்வுகளை நடாத்த உத்தேசித்துள்ளோம். விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
10.01.2018 (வியாழன்) அன்று கிளிநொச்சி நகரில், கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்துக்கு எதிரில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நிகழ்வு இடம்பெறும். நிகழ்வு ஒழுங்கமைப்பு திரு. றஜிதன் 077 790 6383.  பாடசாலை மாணவர்களிற்கான விழிப்புணர்வு, உள்ளூர் விவசாயிகளுடனான கலந்துரையாடல், அங்காடி அங்குரார்ப்பணம் என்பன நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும்.
10.01.2018 (வியாழன்) அல்லை விவசாயின் விழ்ப்புணர்வு நிகழ்வு – 077 621 9086 மாலை 3 மணி முதல் 5 மணிவரை
11.01.2018 (வெள்ளி) அன்று முழங்காவிலில் அமைந்துள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தில் காலை 9 மணி முதல் 1 மணிவரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.  நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு திருமதி. சிந்துஜா  075 204 2712. பாடசாலை மாணவர்களிற்கான விழிப்புணர்வு, உள்க்ளூர் விவசாயிகளுடனான கலந்துரையாடல், மரநடுகை நிகழ்வு, புதிய ஆண்டில் காய்கறிப் பயிரிடலை மீள ஆரம்பித்தல் என்பன நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும்.
12.01.2018 (சனி) அன்று மன்னாரில், அடம்பன் பண்ணையில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நிகழ்வு இடம்பெறும். நிகழ்வு ஒழுங்கமைப்பு திரு. உருத்திர மூர்த்தி  077 075 7875.  பாடசாலை மாணவர்களிற்கான விழிப்புணர்வு, உள்ளூர் விவசாயிகளுடனான கலந்துரையாடல், அங்காடி அங்குரார்ப்பணம் என்பன நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும்.
13.01.2018 (ஞாயிறு) அன்று யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்படுகிறது. விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
14.01.2018 (திங்கள்) அன்று முல்லைத்தீவு கைவேலியில் அமைந்துள்ள செல்வபாக்கியம் பண்ணையில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நிகழ்வு இடம்பெறும். நிகழ்வு ஒழுங்கமைப்பு திரு. செல்வநேசன்  077 061 0698.  பாடசாலை மாணவர்களிற்கான விழிப்புணர்வு, உள்ளூர் விவசாயிகளுடனான கலந்துரையாடல், இயற்கைவழி உள்ளீடுகள் உற்பத்தி தொடர்பான பயிரை என்பன நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும்.
குறித்த நிகழ்வுகளிற் தவறாது கலந்துகொள்ளுமாறு இயற்கைவழி ஆர்வலர்கள்/ செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மேலதிக தகவல்களிற்கு இயற்கைவழிச் செயற்பாட்டாளர். திரு. வசீகரன் 077 378 8795

===================================================================================

இயற்கை விவசாயம் என்றால்
என்ன?

மனிதன் இயற்கையை இயற்கையாக உழவுத் தொழிலை செய்வது இயற்கை விவசாயம்.பயிர் வளர்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நிலம்,நீர், காற்று, மற்றும் சூரிய ஒழி ஆகியவற்றின் முலம் இயற்கை வழங்குகிறது. இதுவே பயிர் வளர்சிக்கு போதுமானது. ஆனால் இன்று மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக சத்தான உணவுப் பொருள்களையும் அதிகரிக்க வேண்டும்.

இயற்கை உரம்,இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி, இயற்கை பூச்சி விரட்டி, மற்றும் இயற்கை நுண்ணுயிர் உரம் ஆகியவற்றின் முலம் இயற்கை விவசாயம் செய்து சத்தான உணவுப் பொருள்களை அதிகரிக்க முடியும்.

செயற்கை விவசாயம் ஏன் செய்ய கூடாது ?

இயற்கை விவசாயத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது செயற்கை விவசாயம்.செயற்கை உரங்கள் நிலத்துக்குப் போதைப் பொருள்கள்.போதை விரைவில் மறைந்துவிடுகிறது. மறுபடியும் போதை வேண்டுமானால், குடிகாரன் மீண்டும் குடிக்க வேண்டும். செயற்கை உரமும் இப்படியே விரைவில் வேலைசெய்து அழியும். அதனால், ஆண்டுதோறும் நிலத்துக்குச் செயற்கை உரத்தை இட வேண்டும்.
அடிக்கடி இந்த உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் கெட்டுப்போகிறது. பிறகு அது விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை.

செயற்கை விவசாயத்தில் வேதியியல் (ரசாயனம்) முறையில் உணவு பொருள் உற்பத்தி செயப்படுகிறது. ஆனால் தரமான பொருள் உற்பத்தி செய்யமுடியாது.

1880 ஆம் ஆண்டுக்கு பின் மனிதன் செயற்கை விவசாயத்துக்கு முழுமையாக மாறிவிட்டான். இதானால் தாய்யின் கருவில் உள்ள குழந்தை முதல் பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏதவாது ஒரு நோய் பெயர் தெரிந்த பெயர் தெரியாத புது புது நோய் இருக்கிறது.தினம் தோறும் புது புது நோய்யால் மக்கள் உயிர் இறப்பு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த செயற்கை விவசாயத்தினால் பூமியில் உள்ள முழுமையாக அல்லது பாதி உயிர் இனங்கள் உயிர் இழந்துவிட்டது. இயற்கை வளம் முழுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. .இதனால் செயற்கை விவசாயம் அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.

செயற்கை உரம் மற்றும் மருந்துகளை உற்பத்தி செய்யும் கம்பெனியிடம் இருந்து அரசாங்கத்திற்கும் ஒரு சில அதிகாரிகளுக்கு லஞ்சம் பணம் கிடைக்கிறது. மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்துவிடும். விலை வாசி உயர்ந்து விடும் என்கின்ற பயம்.

செயற்கை விவசாயத்தை ஏன் தொடங்கி வைத்தார்கள்?

உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்க ஆனால் தரமான பொருள் உற்பத்திக்கு அல்ல. ரசாயனம் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையின் முலம் அதிக இலாபம் ஈட்ட .

செயற்கை விவசாயத்தினால் யாருக்கு என்ன நன்மை ? யார் இலாபம் அடைகிறார்கள் ?

செயற்கை விவசாயம் செய்வதனால் உழவருக்கும் மக்களுக்கும் எந்த நன்மையும் இல்லை ஆனால் செயற்கை உரம், மருந்து உற்பத்தி செய்யும் கம்பெனி நல்ல இலாபம் அடைகிறது.

இயற்கை மற்றும் செயற்கை விவசாயத்தில் உள்ள நன்மை/தீமைகள் என்ன?

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் தரமான உணவு பொருளை அதிகமாக உற்பத்தி செய்ய முடியும்.

செயற்கை விவசாயம்:

அதிகமாக உணவு பொருளை உற்பத்தி செய்ய முடியும் ஆனால் தரமான உணவு பொருளை உற்பத்தி செய்ய முடியாது.

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் உற்பத்தி பொருள் அதிகமான நாள் வைத்திருக்க முடியும்

செயற்கை விவசாயம்:

அதிகநாள் வைத்திருக்க முடியாது.

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் உற்பத்தி பொருளுக்கு செலவு மிகமிகக் குறைவு

செயற்கை விவசாயம்:

உற்பத்தி பொருளுக்கு செலவு அதிகம்.

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் இயற்கையாக உணவு பொருள் உற்பத்தி செய்யபடுகிறது. இதனால் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும்.

செயற்கை விவசாயம்:

செயற்கை விவசாயத்தில் செயற்கையாக உணவு பொருள் உற்பத்தி செய்யபடுகிறது. இதனால் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியாது.

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் இயற்கை வளம் மற்றும் உயிர் இனம் முழுமையாக பாதுகா க்கபடுகிறது.

செயற்கை விவசாயம்:

செயற்கை விவசாயத்தில் இயற்கை வளம் மற்றும் உயிர் இனம் முழுமையாக அழிக்கப்படுகிறது.

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தினால் மனிதனுக்கு நோய்கள் வருவது இல்லை.

செயற்கை விவசாயம்:

செயற்கை விவசாயத்தினால் மனிதனுக்கு புது புது நோய்கள் அதிகமாக வருகிறது.

உழவர்களின் நண்பன்
இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் மண்புழுக்கள், தட்டான்கள், மற்றும் நுண்ணுயிரிகள் பாதுகக்கபடுகிறது.

செயற்கை விவசாயம்:

மண்புழுக்கள், தட்டான்கள், மற்றம் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகிறது.
உரம் மற்றம் பூச்சி மருந்துகள் அதிகமாக பயன்படுத்த வேண்டும்

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் குறைவாக பயன்படுத்தினால் போதும்.

செயற்கை விவசாயம்:

அதிகமாக பயன்படுத்த வேண்டும்.மிண்டும் மிண்டும் பயன்படுத்த வேண்டும்.
விசத்தன்மை உடையது

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயத்தில் உணவு பொருள் ஆரோக்கியமானது .

செயற்கை விவசாயம்:

உணவு பொருள் ஆரோக்கியமற்றது விசத் தன்மை உடையது.

இயற்கை விவசாயம் எப்படி செய்யவேண்டும்?

இயற்கை விவசாயம் இயற்கையொடு இணைந்து செய்யவேண்டும்.உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்க. மடக்கி உழவு தொழில்நுட்பம்,பசுந்தழை உரம்,பசுந்தாள் உரம், மண்புழு உரம் ,மக்கிய உரம்,இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி, இயற்கை பூச்சி விரட்டி, மற்றும் இயற்கை நுண்ணுயிர் உரம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யவேண்டும்.


kk

இயற்கை விவசாய வாரம் 08/12/2018 to 14/12/2018 (ekuruvi editorial)

இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.- பாமயன்

இயற்கையோடு இணைக்கவென இரு வாரங்கள் தாய் மண்ணில்!

 

 

 

http://punithapoomi.com/?p=33836

http://www.nimirvu.org/2018/10/blog-post_31.html

http://www.nimirvu.org/2018/11/blog-post_29.html

http://www.nimirvu.org/2018/11/02.html

புதிய நம்பிக்கை ராகியினுடாக ” ஆசிரியர் விருது அறிமுகமும்” , 2 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடும்