கனடாவில் இகுருவி விழாவில் புதிய வெளிச்சம் விருது முனைவர் கந்தசாமி சிதம்பரநாதனுக்கு

முனைவர் கந்தசாமி சிதம்பரநாதன். போர்க் காலத்திலும் அதன் பின்னரும்
உளவியல் அடிப்படையில்  பாதிக்கப்பட்ட மக்களின் மனக்கவலை, மனவழுத்தம்
ஆகியவற்றை கலைமூலம் ஆற்றுப்படுத்தி வருகிறார். அவரும் அவரின் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடமும்  பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச் சென்று  சந்தித்து  அவர்களது கதைகளைக் கேட்டு பதும் அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடித்தமானத்தை உருவாக்கி வருகிறார்கள். இவருக்கான  புதிய வெளிச்சம் விருதை புதிய வெளிச்சமே வழங்கியிருந்தது. அவர் நேரில் வர முடியாது போனதால் விருதை அவரது மகள் பெற்றுக் கொண்டார்.

நாங்கள் எப்போதும் உயர்ந்தவர்கள் என்ற சிந்தனையோடு இருப்பது தான் மனதில் மகிழ்சியை தேக்கி வைப்பதற்கான ஒரே மந்திரம்.
மனித மனங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கவலைக் கறைகளை கழுவி அவற்றை ஆற்றுப்படுத்தி நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வைப்பது சவால் மிக்கது.இந்த சவால் மிக்க பணிக்காக தனது வாழ்வை அர்பணித்து நிற்கும் ஒரு மனிதர் தான் கலாநிதி. க.சிதம்பரநாதன்
தமிழ் நாடக, அரங்கியல் துறையில் சிறப்பு மிகுந்த ஆளுமைகளில் ஒருவர் தான கலாநிதி. க.சிதம்பரநாதன். 1980 களில் யாழ் பல்கலைக் கழகக் கலாசாரக் குழுவை நிறுவியவர்களில் முக்கியமானவர். இக் கலாசாரக் குழு மூலமாகவே புகழ்பெற்ற அரசியல் நாடகங்களான மண்சுமந்த மேனியர் , மாயமான், போன்ற பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டு அரசியல் உணர்வையும் விடுதலை வீச்சையும் வளர்த்தன.அன்று முதல் இன்று வரை மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் பாரிய பணியினை பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற ஒரு மனித நேய செயற்பாட்டாளர் கலாநிதி க.சிதம்பரநாதன்.
அரங்க செயற்பாட்டுக் குழு, பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் ஆகியவற்றின் ஊடாக  அரங்க நிகழ்வுகளை வடக்கு கிழக்கில் நடத்தி அதன் மூலமாக மன அழுத்தங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை அதில் இருந்து மீட்டெடுக்கும் பாரிய பணியினை கலாநிதி சிதம்பரநாதன் அவர்கள் ஆற்றி வருகின்றார்.
யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னரான காலத்திலும் மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை அரங்க செயற்பாடுகள் மூலமாக இவர் முன்னெடுத்து வருகின்றார்.அரங்க செயற்பாட்டு அனுபவம் மற்றும் ஆற்றுப்படுத்துகை மூலமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது மனப்பாரங்களை குறைத்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட கிராமங்களை தேடி இவரும் இவருடைய குழுவினரும் தொடர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
போருக்கு பின்னரான சூழலில் யாருமற்ற தனித்துவிடப்பட்டதாக வாழும் மனிதர்களை சந்திப்பதும் அவர்களின் கதைகளை கேட்பதும் அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவதும் மிக அவசியமானது.

இந்த வருட ஆரம்பத்தில் இகுருவி நடத்திய  புதிய வெளிச்சம் செயலமர்வுகளில் கலாநிதி க.சிதம்பரநாதன் அவர்களும் அவரின் பண்பாட்டு மலர்சிக் கூடமும் முழுமையான பங்களிப்பினை வழங்கியிருந்தமை நினைவு கூரத்தக்கது.
மக்களோடு மக்களாய் வாழ்ந்து அந்த மக்களுக்காக தன்னை அர்பணித்து நிற்கும் கலாநிதி க.சிதம்பரநாதன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான புதிய வெளிச்சம் விருதினை வழங்கி கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கின்றது இ.குருவி

Award sponsored by

Puthiya Velicham

ekuruvi night 2018