இகுருவியின் மே 18 (Video Att)

இகுருவியின் மே 18

இகுருவி மற்றும் புதிய வெளிச்சம் ஒழுங்கு செய்த 2019 மே மாத இனவழிப்புக்கு எதிரான மற்றும் மனிதாபிமானத் உதவி தொடர் நிகழ்ச்சிகளில் சுமார் 10,000 க்கு மேற்படடவர்கள் பங்கேற்பு.

இந்நிகழ்வுகள் 2015, 2017களில் தாயகத்தில் (வடக்கு, கிழக்கு) எம்மால் நிகழ்த்தப்பட்ட புதிய வெளிச்ச நிகழ்வுகள் போன்று, புலம்பெயர் சமூகத்திலும் அதன் இலக்கை அடைந்துள்ளது

#மூன்று நிலைகளில் திட்டமிடிருந்தோம்
1) Humanitarian (தாயக மக்களுக்கான உதவி)
2) Tamil Genocide (தமிழ் இனப்படுகொலை பரப்புரை)
3) Passing memories (ஞாபங்களை கடத்தல்)

#செயற்பாடுகள்
1) விளம்பரமில்லாத உலகத் தரமான எழுத்தாளர்களுடன் இகுருவி பத்திரிகை 15, 000 பிரதிகள் வெளிவந்தது. (Print and Digital) http://www.ekuruvi.com/wp-content/uploads/2019/05/final-web-file.pdf

2) 70 வருட இனப்படுகொலை தொடர்பான சம்பவங்களை இணைய, சமூக வலை பரப்புரை மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தமை((Digital Marketing, Socila Media Paid ad , Share  , email )   https://images.biztha.com/Latest-Events-2019/Ekuruvi-Light-2019-Digital-Marketing/
3) 30 வருட யுத்த வடுக்கள் ஓவியங்களாக ஓவியர் புகழேந்தியின் “Faces of War” எனும் ஆங்கில, தமிழ் புத்தகம் உலகம் முழுவதும் செல்ல அதன் ஒரு பகுதிக்கு பெரும் தொகை பணம் வழங்கி இகுருவியும் பதிப்பிட்டது

4) “From War Crimes to Tamil Genocide – An Awareness Conference” -காலை, மாலை தொடர் நிகழ்வுகளாக, மதிய உணவுடன் இலவசமான நிகழ்ச்சி – சுமார் 150 பேர் பங்கேற்பு . (காலை: Passing memories, Tamil Genocide / மாலை: Humanitarian) காணொளி  http://www.ekuruvi.com/tamil-genocide-2/

5) இனவழிப்பு வாரத்தில் Dr. ஆறுதிருமுருகன் அவர்கள் முலம் சுமார் 15க்கு மேற்பட்ட கோயில்கள், மற்றும் Senior Centre களில் ஆற்றுப்படுத்துகை, அறநெறி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

தாயகத்துக்கான மனிதாபிமான பணிகளை அதிகரிக்கும் புதிய வெளிச்ச அவரது சொற்பொழிவுகளில் சுமார் 10,000 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதே போன்று 2015 ஆம் ஆண்டு பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிரிஷ்ணன் அவர்களின் சொற்பொழிவுகளில் தாயகத்தில் சுமார் 15,000 மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

6) கடந்த 7 வருடமாக சுமார் 1000 பேருடன் நடைபெறும் ekuruvi night எனும் பிரத்தியேக தனிப்பட்ட இகுருவியின் விளம்பர மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக நிகழ்வு, இம்முறை “ekuruvi Light 2019” எனும் நிகழ்வாக மாற்றப்பட்டு 556 பேருடன் உலகப் புலம்பெயர் மக்களுக்கு ஒரு மைல் கல் நிகழ்வாக இடம்பெற்றது

எமது கருப்பொருள்களான Passing memories, Tamil Genocide, Humanitarian என்பவற்றை எமது மக்களுடன் பகிர்ந்துகொண்டமையானத, ஒரு முன்னுதாரணமாக உங்கள் தனிப்பட்ட நிகழ்வுகளிலும் எம் இனம் சார்ந்து இவ்வாறு கொண்டு செல்லப்படவேண்டும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறது.

7) இகுருவியின் பிரத்தியேக நிகழ்வில் இரவுணவாக ‘கஞ்சி ‘ கொடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் அவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டது.

8) நிலாந்தன் அவர்களது மே 18 க்கான நினைவு பேருரையும், இணையப்பரப்பில் அதனை சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு கொண்டு சேர்த்தமையும் உலகமெங்கும் நடைபெறும் மே 18 நிகழ்வுகளுக்கு வலுசேர்த்தன.

9) ekuruvi light 2019 நிகழ்வுக்கான முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பாடலை உருவாக்கியமை . வசனம் இசையமைப்பு, நடனம், இணைய பரப்புரை  https://www.youtube.com/watch?v=SDNBuEqLFn8

10) தாயகத்திலிருந்து Humanitarian புதிய வெளிச்ச விருதுக்காக விமானம் முலம் அழைக்கப்பட்ட Dr. Sencholselvar Aaruthirumurukan, Rasaiya Kuventhiranathan மற்றும் அவர் மனைவி

11) வன்கூவர் இலிருந்தும், தமிழ் நாட்டிலிமிருந்தும் அழைக்கப்படட இகுருவியின் Genocide ஆவணப்படுத்தல் தொடர்பான விருதுக்காக Suren karththikesu மற்றும் சினங்கொள் Ranjith Joseph.

12) 1989 ஆண்டு நடைபெற்ற “வல்வை படுகொலை” நூல் – 30 வருட நினைவாக மீள் பதிப்பித்தலும், அதன் ஆவணப்படம் வெளியிடலும். தாயகத்திலிருந்து அழைக்கப்பட வல்வை ந.அனந்தராஜ் அவர்கள் பங்கேற்பு

13) அமெரிக்காவிலிருந்து மருத்துவர் வரதராஜா அவர்கள் பங்கேற்பும், A Note from the No Fire Zone ஆவணப்படம் trailer காட்சிப்படுத்தலும்

14) கடந்த ஒரு வருடமாக eகுருவி பத்திரிக்கைக்கு உண்டியல் மூலம் பணம் கொடுத்து வாங்கியவர்கள் மூலம் பெற்றுக்கொண்ட $1375.70 பணம், Dr Sencholselvar Aaruthirumurukan அவர்களிடம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது பணம் கொடுக்காமல் எடுக்கப்பட்ட பத்திரிகைகளுக்கான பணத்தை பெறுவதற்கான முற்சிகளும் எங்களால் எடுக்கப்படுகிறது. நடைபெறும் தொடர் நிகழ்வுகளில் நன்கொடையாக வழங்கலாம்.

15) அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் வருகை, அவரது சந்திப்புகள் (மே 14, அவரது தாயார் இறந்த செய்தி கேட்டு அவர் உடனடியாக தாயகம் சென்றதால், அதன் பின்னர் பல நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன)

16) ஒட்டொவாவிலும், டொரோண்டோவிலும் நடைபெற இருந்த ஓவியர் புகழேந்தியுடனான ஓவியப் பயிற்சி பட்டறைகள், Genocide ஓவிய கண்காட்சி நிகழ்வுகள்- முதல் நாள் அவரது பயணத்தில் தடங்கல் ஏற்பட்டதால் இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டன. பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெறும்.

17 ) Dr Sencholselvar Aaruthirumurukan அவர்களது சமூக பணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடைபெறவுள்ள தனிப்பட்ட நிதி சேர் நிகழ்வு மூலம் $15,000 கனேடியன் டொலர்கள் அன்பளிப்பாக தாயகத்துக்க வழங்கப்பட்டது (22 மே 2019)

18) தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை இகுருவி பத்திரிகையின் வெளியிட்டு விழா

சேனல் 4 – Callum Macrae அவர்களையும் அழைத்திருந்தோம். இறுதிநேரத்தில் முடியாமல் போனது. ஒரு சிறிய ஊடகத்தினால் எம்மால் முடிந்ததை செய்திருக்கிறோம்.

இச்செயற்பாடுகள் சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. விசா ஒழுங்குகளிலிருந்து நூல்கள் வரை திட்டமிடல், செயற்படுத்தல் என நீண்ட மனித உழைப்பு, பண விரயம், மன உளைச்சல், சோர்வு என்பவற்றுக்கு மத்தியில் என்னோடு முதுகெலும்பாக நின்று செயலாற்றிய ரமணன் , ஜெயகௌரி, இந்திரன், ரதன், ரஜீவ், மதிசுதா, Pat ,இகுருவி ஐயா , தரசிகன் போன்றவர்களுக்கும், பெயர் கூறிப்பிடாமல் விட்ட பலரது உழைப்புக்கும், ஒத்துழைப்புக்கும் ஏற்பட்ட பணவிரயத்துக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன்.

கடந்த வருடம் புதிய வெளிச்ச ஆசிரிய விருதை ஆரம்பித்துவைத்த ஞா.ராகினி இம்முறை முள்ளிவாய்க்கால் ஈகச்சுடரை ஏற்றிவைத்தார் என்ற செய்தி, புலம்பெயர் ஊடகமாக நாங்கள் மக்களோடு நிக்கின்றோம் என்ற ஒரு சிறு மன ஆறுதலைத் தந்தது.

இன்னும் கடமை என்னையும் உங்களையும் அழைக்கின்றது.

 

அன்புடன்
நவஜீவன் அனந்தராஜ்
19 /05/2019

புகைப்படங்களை பார்வையிட இந்த இணைப்பில் Click

https://images.biztha.com/Latest-Events-2019/E-Kuruvi-Light-2019-Photos-by-Tharshigan-e-Kuruvi-May-12