இகுருவியின் விருது விழாவில் சேவையாளர்கள், சாதனையாளர்கள் கௌரவிப்பு!

இகுருவியின் விருது விழாவில்
சேவையாளர்கள், சாதனையாளர்கள் கௌரவிப்பு!
பத்திரிகை, மற்றும் இணைய வாயிலாக கனடாவிலிருந்து வெளிவரும் இகுருவி ஊடகத்தி;ன் 2018 ஆம் ஆண்டுக்கான ஆறாவது விருது விழா கடந்த ஆறாம் திகதி, வெள்ளியன்று சிறப்பாக இடம் பெற்றது. . Scarborough Convention Centre இல் இடம்பெற்ற நிகழ்வுக்கு அதன் வாசகர்கள், விளம்பரதாரர்கள், வர்த்தக பிரமுகர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். விழா நிகழ்வுகளை ஒலிபரப்பாளர் ரமணன் நெறிப்படுத்தியிருந்தார். நிகழ்வுகள் Mega Tuners இசைக் குழுவின் இசையோடும், சம்பிரதாய நிகழ்வுகளோடும் ஆரம்பமாகின. விழாவை மையப்படுத்தும் சிறப்பு நிகழ்வாக விருது வளங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
தமக்கு கிடைக்கக்கூடிய உயர்வான வாழ்வை துறந்து, தாயக மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த சமூக சேவையாளர்கள், மற்றும் வர்த்தகத் துறையில் சாதனை புரிந்துவரும் கனடிய தமிழர்கள் போன்றோர் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வளங்கப்பட்டன. கனடிய தமிழ் சமூகத்தவர் மத்தியில் முத்திரை பதிக்கும் பிரபலமானவர்கள் அவர்களுக்கான விருதினை வளங்கி கௌரவித்தார்கள்.
கௌரவத்துக்குரிய உயர்வான விருது, தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த வைத்திய கலாநிதி Dr சிதம்பரநாதன் முகுந்தன் அவர்களுக்கு வளங்கியதன் மூலம் தரமானவர்களை இகுருவி இனம் கண்டுள்ளது என்ற பெருமையை பெறுகிறது. Dr. முகுந்தன் அவர்கள் ஒரு இதய சந்திரசிகிச்சை நிபுணராவார். தான் பிறந்து வளர்ந்த மண்ணில் வாழும் மக்கள் இதய சந்திரசிகிச்சைக்காக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தென்பகுதிகளுக்கு செல்லவேண்டி இருந்த நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையிலேயே திறந்த இதய சந்திரசிகிச்சை பிரிவை ஆரம்பித்து, பலரின் உயிர்களை காப்பாற்ற வழிவகுத்த சாதனைக்குரிய ஒருவராக Dr முகுந்தன் போற்றப்படுகிறார். அவருக்கு ‘அர்ப்பணிப்பு மிக்க சமூக சேவைக்கான விருது’ வளங்கப்பட்டது சிறப்பாகும்.
அடுத்து, தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டு மன அழுத்தங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்து, அவர்களுக்காகவே வாழும் ஒருவர்தான் கலாநிதி – கந்தசாமி சிதம்பரநாதன் அவர்கள். மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் உன்னத பணியை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் கலைப் படைப்புகள் மூலம் தொடர்ந்து முன்னெடுத்துவரும் ஒரு மனித நேய செய்ற்பாட்டாளர். அவருக்கு சமூக மாற்றத்துக்கான புதிய வெளிச்சம் விருது வளங்கி கௌரவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் விழாவுக்கு சமூகமளிக்க முடியவில்லை. அவரது மகள் அந்த விருதை பெற்றுக்கொண்டார்.
மேலும், கனடிய தேசத்தில் உயர்வினை எட்டிநிற்கும் தமிழர்கள் மூவர் விருதுகளை பெற்றுக்கொண்டார்கள். ஒருவர், திரு.ஜெயநாதன் மயில்வாகனம் அவர்கள். 42000 சதுர அடி பரப்பில் 1500 பேரை உள்ளடக்கக்கூடிய விருந்தினர் மண்டபத்துக்கு அதிபதி. தனிமனித முயற்சியால் உருவாக்கப்பட்ட . Scarborough Convention Centre மண்டபம் அவரது உழைப்பினால் உயர்ந்தது. “Pioneer in Hospitality Industry’ விருது அவருக்கு வளங்கப்பட்டது.

அதிகம் படிக்காத ஒருவர், ஒரு வர்த்தக சாம்ராஜ்யத்தையே கனடாவில் கட்டி ஏழுப்பியிருப்பது சாதனைக்குரியதே. அந்த வகையில், மிகப் பெரும் அச்சு நிறுவனத்தின் அதிபராக, பலருக்கு தொழில் வளங்கனராக இருக்கும் திரு. ரஜீகரன் முத்துராமன் அவர்கள் சிறந்த தலைமைத்துவப் பண்பிற்கான விருதினை பெற்றுள்ளார்.

 

மாமிசக் கலப்பற்ற உணவுகளை விற்பனை செய்யும் Vegan உணவகங்களை உருவாகி பிரபலம் அடைந்திருக்கும் Hellenic Vincent De Paul அவர்களுக்கு சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கான விருது வளங்கி கௌரவிக்கப் பட்டது.
தொடர்ந்து, விழாவுக்கு துணை நின்றவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இகுருவியின் ஆசிரியர் நவஜீவன்,அவருக்கு துணைநிற்கும் இகுருவி ஐயாவுடன் இணைந்து அவர்களுக்கான கௌரவத்தை வளங்கினார். அவர் உரையாற்றும்போது, போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கு ‘புதிய வெளிச்சம்’ என்ற திட்டத்தினூடாக உதவும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், கடந்த காலங்களில் தாயகத்தில் தாம் மேற்கொண்ட பணிகள் பற்றிய தகவல்களையும் அவர் விபரித்திருந்தார். அதுபற்றிய ஒரு காணொளியும் காண்பிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் தம்மோடு இணைந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த ‘தமிழ் பேச்சு’ இராஜ்மோகன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. இன்னிசை நிகழ்வுகளோடும் இரவு விருந்தோடும் விழா இனிதே நிறைவுபெற்றது.

செந்தாமரை – ரவி