“இகுருவி விருது இரவு – பல தரவுகள்”

ekuruvi-171-L இகுருவி இரவு 2018 இன்னிசையோடு இனிதாய் நடைபெற்றுக் கொண்டிருக்க, மண்டபத்திற்குள்ளே சற்று தாமதமாய் தடங்களைப் பதித்து விரிந்திருந்த கதவுகளையும் தாண்டி நுழைந்து எண்கள் ஒதுக்கப்பட்ட எனது மேசையில் பல பெண்கள் அமர்ந்திருந்ததால் அருகிலுள்ள நண்பர் அமர்ந்திருந்த மேசையை நோக்கி நகருமுன் கண்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இருந்த கமரா போல மண்டபம் முழுதையும் படம்பிடிக்க, ஆம் பொங்கல் பானைபோல மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

நவஜீவனும், இகுருவி ஐயாவும் கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டவர்கள் போல, ekuruvi-150-Lநிகழ்வின் அமைப்பாளர்களாய் படுபிஸியாக இருந்தனர். கைகளை அசைத்து என் வருகையை அவர்களிடம் பதிவு செய்து கொண்டேன். சில நிகழ்வுகளுக்குப் பின்பு அந்த ஈர்ப்புக் குரலுக்கு சொந்தக்காரன் ரமணன் மேடையில் தோன்றி நிகழ்வின் சுருதியான விருது வழங்கும் நிகழ்வை தொடங்கினார்.

நவஜீவன் முன்னதாக இந்த நிகழ்வின் நோக்கத்தை பெரிதாக ஏதும் அலட்டிக்கொள்ளாமல் தன்பாணி தனிப்பாணி, பணி செய்து கிடப்பதே! என்பது போல செய்தவற்றை செம்மையாக வெண்திரையில் வெட்டவெளிச்சமாய் நம் கண்களின் இமைகள் மூடாதபடி வியப்பாய் விளக்கியது. பின்பு நிறையச் செய்தவற்றை கொஞ்சமாய் பேசினார். அதில் விஞ்சிய வரிகள், நெஞ்சம் தொட்ட வரிகள் இவை. 2009 க்குப் பின்னரான தமிழ்ச்சூழலில் ஒரு பத்திரிகை நடத்துனராகவும் அதன் ஆசிரியராக இருப்பதிலும் இருக்கும் அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாய், அதற்கான ஒவ்வொரு தருணமும் நான்பட்ட வேதனையும் வலியையும் சவால்களையும் எண்ணிப் பார்க்கும் போது அவற்றைப் பிரசுரித்தேன் என்பதைவிட பிரசவித்தேன் என்று சொல்லத் தோன்றுகிறது.

எண்ணமும், செயலும் எப்போதும் தூய்மையாய் இருக்க பிராத்திக்கிறே

ekuruvi night 2018

ekuruvi night 2018

ன். உங்கள் பாராட்டுக்களும், விமர்சனங்களும் கோபமும் என்னை எப்போதும் உங்களுடன் பிணைத்து வைத்திருக்க வேண்டுகிறேன்.

2010 இலிருந்து தனிமனிதனாக ஆரம்பித்து பத்து தடவைகளுக்கு மேற்பட்ட தாயகம் நோக்கிய எனது பயணங்கள், கடந்த இரண்டு வருடங்களாக புதிய வெளிச்சமாய் நிறைவான நம்பிக்கைகளை ஏற்படுத்தி உள்ளது. யுத்த வடுக்களால் இருண்டு போன மனங்களோடு வாழும் தாய்தேசத்தில் இம்முறை புதிய வெளிச்சம் கல்வி முன்னேற்றம், மனநல புத்தாக்க மறுவாழ்வுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இவை ஏற்படுத்திய அதிர்வு தாயகப்பகுதிகளில் எதிரொலித்தவாறே இருப்பது கண்டு நாம் மனநிறைவடைகிறோம்.

புதிய வெளிச்சம் என்பது தனிமனித முயற்சியினால் சாத்தியப்படக்கூடிய மாற்றங்களைத் தாண்டியது. அதனால் தான் இந்த ஒளிவிளக்கை இங்கு வாழும் ஒவ்வொருவரின் கரங்களிலும் பகிர்வதற்கு நாம் விரும்புகிறோம் என்பதை அறைகூவலாக நவஜீவனின் வார்த்தைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின.

நாங்கள் உங்களுக்கு விருது தருகிறோம்; எங்களுக்கு விண்ணப்பியுங்கள் என்று விளம்பரம் செய்து நீண்ட வரிசையில் நிற்க வைத்து விருது விழாக்கள் செய்யும் சில அமைப்புகள் மத்தியில், இந்த விருதுகள் முற்றிலும் மாறுபட்டு ஆச்சரியமூட்டும் அதிசய மனிதர்களை, ஆடம்பரமின்றி அறிமுகப்படுத்துவதாய் அமைந்தது விழாவின் முனைப்பான ஒளி “Highlight”.

அமெரிக்காவில் பத்திரிகைகள் விற்கும் பெட்டிக்கடையில் தொடங்கிய குட்டித்தொழில் கனடாவின் தொடரூந்து நிலையங்களிலும் தொடர்ந்து எட்டிப்பிடித்த வளர்ச்சி, தேசங்கள் தாண்டி வாழ்வை வென்றுவிடும் கனவுகளோடு கனடாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் பெருமை பேசும் அடையாளங்களில் ஒன்றான SCARBOROUGH CONVENTION CENTRE என்ற விருந்தோம்பல் நிலைய அதிபர் ஜெகன் அவர்களுக்கான விருது ஏற்புடையதாகும்.

அடுத்து வந்து விருது பெற்றவர், அடிக்கடி விழாக்களில் அவரைப் பார்த்திருக்கிறே

ekuruvi night 2018

ekuruvi night 2018

ன், எனக்கு அறிமுகமில்லாதவர். எப்போதும் ஒரு புன்சிரிப்பை மட்டுமே தானமாகத் தந்தவர் போல கடந்து செல்வார். இவரா… அச்சுத்துறையில் தனித்தமிழனாக சாதனை செய்வதர் என்று ஒருகணம் வியந்துப் போனேன். அவர் தான் ராஜிகரன் முத்துராமன். பல மில்லியன் டொலர் பெறுமதியான அச்சு இயந்திரங்களோடு R J MULTI LITHO நிறுவனத்தின் அதிபராக மெச்சும் வகையில் அச்சுத்துறையில் கச்சிதமாய் செய்துவரும் சாதனைகள் அட நம்ம தமிழன்டா ! என்று மெச்சத் தோன்றியது.

பள்ளிப் படிப்போடி மண்டையில் ஏறல, பாதில குழப்பி, ஆங்கிலமும், அப்படி, இப்படி, ஏதோ

ekuruvi night 2018

ekuruvi night 2018

அச்சகத்தில் மட்டைகளை மடித்துக் கொண்டிருந்த நான் மட்டை அடிக்காமல் பள்ளிக்கூடத்தில் முட்டை வாங்கினாலும், யாருக்கும் பட்டை நாமம் போடாமல் வீட்டையும் நன்கு மகிழ்ச்சியாய் பார்த்து, தொழிலும் பழம் தின்று கொட்டை போட்டு, முட்டி மோதி முன்னுக்கு வந்துள்ளேன் என்று இயல்பாகப் பேசியபோது அரங்கு அதிர்ந்தது கரவொளியால். பட்டப்படிப்புகள் பல படித்தும் கட்டில்லாமல் சில வெட்டியாய் திரியும் நம் இளைய தலைமுறைக்கு இவரின் வெற்றிப்பயணம் பாடநூலாக அமையட்டும்.

அடுத்து, விருதளிக்க வந்தவர்கள் எல்லோரும் கோட்டும், சூட்டுமாய் காட்சியளிக்க ஒரு மெ

ekuruvi night 2018

ekuruvi night 2018

ல்லிய இளைஞர் சாயம் போன ஜீன்ஸ்சும், ரீசேட்டுமாய் எளிமையாய் முதல்மேடை போல பயம் கலந்த வெட்கமும், புன்சிரிப்புமாய் மேடையில் தோன்றினார். இவர் என்ன செய்யப் போகிறார்…. என்று எண்ணங்கள் எழுவதற்குள்ளே அவரின் அரிய சாதனை விளக்கக் காட்சிகள் திரையில் ஒரு தமிழ் அகதியின் குழந்தையால் எதையும் சாதிக்க முடியும் என்று வரும் இளைய தலைமுறைக்கு ஆவணப்படமாய் காட்சியளித்தது. அவர் தான் மூன்றே வயதில் கனடாவுக்கு புலம் பெயர்ந்து இந்த வெண்பனி தேசத்தில் எமக்கான வாய்ப்புகளையும், வசதிகளையும் நாம் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது, இந்த நாட்டில் வாழும் ஏனைய மனிதர்கள் போல வாழவும், உயர்ச்சி  காணவும் நாம் தவறிவிடக் கூடாது என்ற வாழ்வின் தத்துவத்தைக் கொண்ட முப்பதுகளை மட்டுமே தாண்டிய HELLENIC VINCENT DE PAUL.

“VEGAN” எனப்படும் மாமிசக் கலப்பற்ற உணவுகளை மட்டுமே கொண்ட பல உணவகங்களை ரொரன்ரோ பெருநகரில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞன். ஆம்.. இவர் உருவாக்கிய Vegan உணவுத்திருவிழா இங்கு மட்டுமல்ல; அமெரிக்காவின் பெருநகரங்களை நோக்கியதாகவும் விரிவடைந்திருக்கிறது.

எப்படி என்ன செய்யலாம் என்று குப்புற வீழ்ந்து கிடக்கும் தப்பிதமான சில நம் இளைஞர்கள் மத்தியில் முப்பதுகளை மட்டுமே கடந்து செப்புற வழிகாட்டும் வின்சென்ட் டி போல் விருதுக்கு மிகவும் பொருத்தமானவராய் கருதி மகிழ்ந்தேன்.

நித்தமும் யுத்தம் நடந்து குத்தம் ஏதுமின்றி சொத்து சும் அத்தனையும் இழந்து ரத்தம் சிந்தி மொத்த சத்துமின்றி, சத்தம் போட வழியின்றி விழிபிதுங்கியும் மரணத்தின் குழிகளுக்குள்ளே வீழ்ந்து குண்டுகளையும் தாண்டி மீண்டு வந்தவர்களுக்கு செய்யும் தொண்டுகளைக் கண்டு வணங்குகிறோம்.

அந்த வகையில் சொந்த தேசத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி எதிர்ப்புகளையும் எதிர்த்து நின்று வெந்த மனங்களை ஆற்றுப்படுத்தும் அந்த அரிய மனிதர் தான் கலாநிதி க. சிதம்பரநாதன். தனது குழுவினரோடு தான் கற்ற கலையின் விலை பேசாமல், நிலை குநைலந்துப்போன உள்ளங்களை ஆற்றுப்படுத்தி மனதில் மலைபோல பாரங்களைய கற்றும் தலையான பணியினைச் செய்யும் சிதம்பரநாதனுக்கு “சமூக மாற்றத்திற்கான புதிய வெளிச்சம் விருது” பெரிதும் பொருத்தமானது. அளித்த விருதைப் பெற்றுக் கொள்ள அவர் சில காரணங்களால் சமூகமளிக்கவில்லையென்ற வருத்தம் போக்க அவரின் மகளின் கைகளில் விருது தவழ்ந்தது இன்னும் பொருத்தமானதே.

என் அருகிலுள்ள மேசையில் ஒரு சிறு குடும்பம் மூன்று பிள்ளைகள். அப்பா, அம்மா அமைதியாய் அமர்ந்திருந்தார்கள். பிள்ளைகள் அரைத்தூக்க கலக்கத்தில் இருந்ததால் தாயகத்திலிருந்து தான் நேற்றைய தினம் வந்திருப்பார்களோ என்று நானும், நண்பரும் எங்களுக்குள்ளே பேசிக் கொண்டது உண்மையாகிப் போனது.

எளிமையான தோற்றம். இனிமையான முகம் கொண்ட அவரிடம், அவர் அமர்ந்திருந்த மேசையை கடந்து சென்ற சிலர் அவரை வணங்கி வணக்கம் செய்து சென்றதால் அரசியல் பிரமுகராக இருக்குமோ என்ற என் எண்ணம் பொய்த்துப் போனது.

அவரைப் பற்றிய காணொளி திரையில், நுரையோடு கரைதொடும் அலைபோல தொடராக ஒளிர, வழியின்றி விழிநீர் மட்டுமே சொத்தாய் சேமித்து வைத்துள்ள ஏழ்மை உறவுகளின் பிணி நீக்கும் அர்ப்பண வாழ்வையே பணியாகக் கொண்ட மருத்துவர் முகுந்தன் சிதம்பரநாதன் பணிவாய் மேடையேறிய போது கரவொளியால் அரங்கம் அதிர்ந்துப் போனது.

வழக்கமாக வார்தைகளில் ஒரு வர்ணனையோடு பேசி அசத்தும் அறிவிப்பாளர் ரமணன். எந்த வார்த்தை ஜாலமுமின்ற மருத்துவர் முகுந்தனின் இதய நோயகற்றும் திருப்பணியினை பொருத்தமாய், சுருக்கமாய் வந்திருந்த விருந்தினர்க்கு சொன்ன போது எல்லோரும் எழுந்து நின்று எந்த செயற்கையுமின்றி இதயநோய் நிபுணரோடு அத்தனை இதயங்களும் இணைந்து வாழ்த்தியது என்றும் நம் இதயம் விட்டகலாது.

யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சத்திர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் முகுந்தன் இதயங்களோடு கொஞ்சம் வித்தியாசமாகப் பேசுபவர். காசு நிறைந்த மனிதர்களுக்குள்ளே மட்டும் மௌசாக பேசப்பட்ட இதய அறுவைச் சிகிச்சையினை ஏழை, எளியவர்களும் பயன்பெறும் வகை செய்து புதுவெளிச்சம் காட்டியவர்.

நெஞ்சறை திறந்து நாளை துடிக்க மறுக்கப்போகும் இதயங்களையும் இன்றே சீர் செய்து நன்றே இயங்கச் செய்து எமனோடு போராடும் இதயப் போராளி. சிறு கத்திகள் கொண்டு ரத்தமும் சிந்தி காயங்கள் கொண்டு மாயங்கள் செய்து இதயத்தின் காயங்கள் ஆற்றி வையத்துள்ளே மேலும் வாழ நோயகற்றும் மனித நேயன்.

கனேடியத் தமிழர் சார்பில் முகுந்தனுக்கு கிடைத்த இந்த விருதுக்கு புலம்பெயர் சமூகம் தான் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்த விருதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். மரணத்தில் விளிம்பிலுள்ள ஒரு ஏழையின் வஞ்சமில்லாத நெஞ்சத்தை திறந்து இதயத்தை கொஞ்சம் சரி செய்த பின்பு தஞ்சமென்று வந்த அவரின் அஞ்சிய நெஞ்சகன்று மிஞ்சிவரும் எஞ்சிய புன்னகையே நான் நாள்தோறும் பெறும் பெரிய விருது என்றார்.

என்னை அவருக்கு அறிமுகம் செய்து கொண்டு T.E.T தொலைக்காட்சியில் ”டாக்டர் பேசுகிறேன்” என்ற மருத்துவ நிகழ்ச்சியினை கடந்த பல ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறேன், தங்களோடு ஒருநாள் நேர்காணல் செய்ய முடியுமா? என்று கேட்டதும், மறுக்காமல் வந்து ஒருமணிநேரம் தன் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அந்த சுவையான இதயத்தின் இதமான பதிவுகள் அடுத்த இதழில் தொடரும்.

 

கட்டுரை ஆக்கம் – டாக்டர் போல் ஜோசேப் (416 986 4903)

 

navajeevan_anantharaj

1 2 3 4 5 6 7 8 9 10 11