நாட்டின் சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு

நாட்டின் சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (18) மதியம் முதல் நுரைச்சாலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதன் காரணமாகவே இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக ஜெனரேட்டர் இவ்வாறு செயலிழந்துள்ளதுடன் மின் உற்பத்தி நிலையத்தின் சமநிலையை பேணுவதற்காக சில பகுதிகளுக்கு மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜெனரேட்டரை திருத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.