தீ விபத்தில் மூன்று விற்பனை நிலையங்கள் சேதம்

கட்டுபொத பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபொத நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

நேற்று (10) இரவு 8.40 மணியளவில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த தீ அருகில் இருந்த மூன்று விற்பனை நிலையங்களிற்கும் பரவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல் நபர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிராபாத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தீயினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கட்டுபொத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.