வியட்நாமில் உணவு விடுதியில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு

வியட்நாம் நாட்டில் வின்புக் மாகாணத்தில் பல மாடி கட்டிடம் ஒன்றில், ஒரு உணவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த உணவு விடுதியில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ, அந்த தளம் முழுவதும் மளமளவென பரவியது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்து ஓட்டம் எடுத்தனர்.

இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த கோர விபத்தில் 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

வியட்நாம் நாட்டில் இந்த ஆண்டு மட்டுமே இதுவரை 3,454 கியாஸ் சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீ விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 88 பேர் பலியாகி உள்ளனர்.