புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்

இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

கெடெட் அதிகாரியாக 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சேர்ந்த ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமை புரிந்தார்.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் வந்திருந்தனர்.