சஜித்திற்கு ஆதரவளிக்கும் 5 பிரபல அமைச்சர்கள்

அமைச்சர்கள் ஐந்து பேர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு ஆதவளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாட்டளி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், திகாம்பரம், ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்கள் இவ்வாறு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர்.