முதல் நாள் நிகழ்வுகள் ..

முதல் நாள் நிகழ்வுகள் ..

இயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு இன்று மாலை ஊரெழு மரகோச விடுதியின் வாயிலில் இயற்கை வழி அங்காடி திறந்துவைக்கப்பட்டது. இயற்கை முறையில் விளைந்த மரக்கறிகள் மற்றும் விளைபொருட்கள் இந்த அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம். நிகழ்வின் பதிவுகள்,
மற்றும் கொக்குவில் இந்து கல்லூரி உற்பட இன்று பல பாடசாலைகளில் ” இயற்கை விவசாய வாரம் ” விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.

 

இயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு இயற்கை வழி இயக்கத்தினரின் ஆதரவுடன் இன்று மாலை ஊரெழு மார்கோசா விடுதியின் வாயிலில் இயற்கை வழி அங்காடி திறந்து வைக்கப்பட்டது.

அங்காடியை கல்வியியலாளரும், சமூக சேவையாளருமான வல்வை அனந்தராஜ் திறந்து வைத்தார்.

இயற்கை முறையில் விளைந்த மரக்கறிகள் மற்றும் விளைபொருட்களை இனிவரும் காலங்களில் இந்த அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம்.

 

இந்நிகழ்வில் இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்களும், சகோதர அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

அங்காடி திறப்பின் பின் இயற்கைவழி இயக்க நண்பர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

 

இயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு இயற்கை வழி இயக்கத்தினரின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகளும் வடக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது