யாழ் பாடசாலை அதிபர் ஊழல்

யாழ் பாடசாலை அதிபர் ஊழல்

யாழ்ப்பாணத்தில் முடிக்குரிய பாடசாலையான யாழ் இந்து கல்லூரியின்  அதிபர் லஞ்சம் ஊழலில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் .பல நாள் திருடனை பிடிக்கமுடியாமல் ஆசிரியர்களும் , அரசியல் வாதிகளும் உடந்தையாக வாய் மூடி இருந்துள்ளார்க்ள

உலகம் வியக்கும் கல்வி மான்களை உருவாக்கிய பாடசாலை .எங்கள் தேசத்துக்கான அடையாளம் .சுவாமி விவேகானந்தர் ,மகாத்மா காந்தி ,அப்துல் கலாம் என பலர் கால் பதித்த இடமிது , புதிய வெளிச்சம் 2016 இல் பேராசிரியர் ஜெயந்தி ஸ்ரீ பாலகிரிஷ்ணன் அவர்களும் அங்கு சென்றிருந்தார் .

எமது புதிய வெளிச்ச பயிற்சி பட்டரை 2016 நிகழ்வின் போது யாழ் இந்து பழய மாணவர் சங்கத்தினால் போதை பழக்கம் ,மற்றும் குடி பழக்கத்துக்கு எதிராக பட்டரை எடுக்குமாறும் , இதுவே பாடசாலையின் தடுக்கமுடியாது பிரச்சனையாக இருப்பதாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டு , முதல் நாள் பாடசாலை முன்றலில் இது தொடர்பான தலைப்புடன் “பேனர் ” வைத்துவிட்டார்கள் .
இதை அறிந்த ஜெயந்தஸ்ரீ பேராசிரியர் ஒரு ஆளுமையுல்ல அதிபராக உடனடியாக பேனரை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக்கொண்டார் .இறுதிவரை அந்த தலைப்பில் அவர் கதைக்கவேயில்லை . ஆனால் லஞ்சம் இல்லாமை பற்றி கூட அறிவுறுத்தியிருந்தார் .பாடசாலையை விட்டு வெளியே வரும் போது ” மாணவர்கள் ஒவ்வொருவரும் முத்துக்கள் போல் இருகின்ற்றார்கள் .ஆசிரியர்களில் தான் ஒளியில்லை என்று மனம் வருந்தினார் .

இதனால் தான் 2018 இல் புதிய வெளிச்ச பயிற்சி பட்டரையில் ஆசிரியர்களுக்கான மற்றும் அதிபர்களுக்கான பயிற்சி பட்டரையை மூன்று மாவட்டங்களிலும் வழங்கயிருந்தோம் . ஆனால் அதிபர் மாறியிருந்ததால் (தற்போதய அதிபர் ) அவர் இதற்கு சம்மதிக்கவில்லை , சுமார் 30 நிமிடம் அவருடன் நேரில் சென்று உரையாடினேன் , அந்த துன்பியல் நாள் தொடர்பாக இன்றுவரை இங்கும் அங்கும் பலரிடம் முறைப்பாடு செய்துள்ளேன் . அதிபருக்கான எந்த விதமான ஒளியும் இல்லாத “ஒரு அதிபர் ” தான்  அவர் .

இன்றைய இச்செய்தி மிகப்பெரிய ஆறுதலை தந்தாலும் , மிகவும் காலம் கடந்த சட்ட நடவடிக்கையினால் ,அவரினால் நிகழ்ந்த இழப்புகள் எதுவுமே மீள கட்டியெழுப்ப முடியாதவை தான் .
மீண்டும் நல்ல தலைமைத்துவம் உள்ள அதிபர்கள் எம் தேசம் முழுவதும் தங்கள் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுக்க தயாராகவேண்டும்.

தாயகத்தில் நவீன் கல்வி முறைக்கான ஆசிரியர்களையும் , அதிபர்களையும்  கட்டியெழுப்பப்படவேண்டும் .தற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் பொருத்தமற்றவர்களாகவே இருக்கின்ரார்கள். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தான் மனிதர்களை உருவாக்கி வளர்ச்சியான சமுதாயத்தை கட்டியெழுப்பவேண்டியவர்கள் . பாடசாலையில் ஒரு மாணவனின் நேரம் தான் மனித வளர்ச்சியின் பெரும் பகுதியாக இருகின்றது ( productive time ). மாணவர்களை கட்டியெழுப்புவர்கள் எப்பொழுதும் அர்ப்பணிப்பு உள்ளவர்களாக இருக்கவேண்டும்

இன்று ஆசிரி மற்றும் அதிபர்களின் தர வீழ்ச்சி வடமாகாணம் எதிர்வு கொள்ளும் மிக முக்கிய விடயமாக உள்ளது .பாடசாலை கட்டிடங்களை மீண்டும் மீண்டும் நிற பூசுவதை விடுத்து ஆசிரிய உருவாக்கத்தில் பாடசாலை நலன் விரும்பி சமூகங்கள் கவனமெடுக்கவேண்டும்,

தலைமைத்துவ வெற்றிடங்களை புதியவர்கள் , தங்களை தாங்களாகவே உருவாக்கவேண்டும் . யாழ் இந்துவிலிருந்து ஆரம்பித்து வட முனை ஹாட்லி வரை அனைத்து பாடசாலைகளிலும் முதலில் மாற்றம் கொண்டுவரவேண்டும்
பாடசாலைகளில் மட்டுமல்லாது 2009 ற்கு பின்னர் வடக்கு கிழக்கு அணைத்து இடங்களிலும் லஞ்சம், ஊழல் மிகப்பெரும் தொற்று நோயாக மாறிவருகிறது .பாடசாலையில் களையெடுக்க முன்னின்ற ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் இந்து பழையமாணவர் சங்கம் அனைவருக்கும் சிரம்தாழ்த்திய நன்றிகள். தொடரட்டும் உங்கள் தேசப்பணி.

நவஜீவன் அனந்தராஜ்

( செப் 21 2019 facebook )