ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் காலவரையறையின் மூடப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை சம்பவத்தையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை வழங்கப்பட்டதாக கடந்த தினங்களில் முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், இதனையடுத்து சிரேஷ்ட மாணவர்களை கண்டித்தும் அவர்கள் கருத்திற் கொள்ளாமல் செயற்படுவதாக துணை வேந்தர் கூறினார்.