தமிழ் மக்களின் தோழன் JK

தமிழ் மக்களின் தோழன் JK

தமிழ் மக்களின் நண்பன் jim karygiannis ரொரன்ரோ மாநகரத்தின் ஸ்காபரோ-எஜின்கோர்ட் வட்டார கவுன்சிலர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, ரொரன்ரோ மாநகர (city Clerk)  அதிகாரி தெரிவித்துள்ளார். தேர்தலின் போது அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகையை செலவு செய்ததாக குற்றஞ்சாட்டியே இவர் பதிவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமர்ப்பித்த வரவு-செலவு அறிக்கையின் பிரகாரமே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கையில் தவறு உள்ளது என கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

Karygiannis told the Star he would fight his ouster when reached by phone Wednesday.
“There was a clerical error that was a mistake,” he said. “Something was filed in the wrong column and we’re fighting it and there’s going to be a statement that we’ll be sending out.”

ஓன்றினைக்கப்பட்ட 22ம் வட்டாரத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் நோம் ஹெலியை தோற்கடித்து கவுன்சிலரானார். இவர் பெற்ற வாக்குகள் 12593. 2014ல் இதே வட்டாரத்தில் 58 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 1980 களிலிருந்து லிபரல் கட்சி அரசியலில் ஈடுபட்டுவந்துள்ளார். ஒன்ராரியோ மாநிலவைக்கு போட்டியிட்டு தோல்வியடைந்ததையடுத்து, இதற்கு அடுத்த ஆண்டு 1988ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்காபரோ-எஜின்கோர்ட் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார். அதன் பின்னர் மத்திய அரசியிலிருந்து விலகும் வரை தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டார்.
2004ம் ஆண்டு கனடிய பாராளுமன்றத்தில் ஒரு தனிநபர் மசோதாவை முன்வைத்தார். 1915-1923 காலப்பகுதியில் 1.5 மில்லியன் ஆமேனியர்கள் கொல்லப்பட்டனர். இது இன அழிப்பு என்பது இவரது மசோதா. இதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனாலும் அப்போதைய பிரதமர் போல் மார்ட்டின் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. துருக்கிய தூதரம் தனது கடுமையான எதிர்ப்பை முன்வைத்தது.

2004 சுனாமியை அடுத்து, இவர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார் என்ற குற்றச்சாட்டை, சில பா.உக்கள், பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தனர். வெள்ளம் மற்றும் சூறாவளி அழிவுகளுக்கு முன்நின்று உதவிகள் புரிந்துள்ளார். கயானா மற்றும் நியு ஓலியன்ஸ் இவற்றிற்கு சிறந்த உதாரணங்களாகும்.

இவர் அதென்ஸ்ல் பிறந்த கிரேக்க வம்சாவளி. இதனால் மசடோனியாவின் உதயத்தை எதிர்த்தார். ஆனாலும் இவர் ஒடுக்கப்பட்ட தேசியங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்துள்ளார். ரொரன்ரோ மாநகர சபையில் கிறீக் இனஅழிப்பை கண்டித்தும் மசோதா ஒன்று கொண்டுவந்திருந்தார். 1914-1922 காலப்பகுதியில் ஒட்டமான் சாம்ராச்சியத்தாலும், துருக்கிய அரசினாலும் சுமார் 350000 பேர் கொல்லப்பட்டனர். இதனை Pontian genocide’  எனவும் குறிப்பிடுவார்கள்.

தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றார். கனடிய தமிழ் மக்களுக்கு பல வழிகளிலும் உதவியும் புரிந்துள்ளார். தமிழ் மக்களின் நிகழ்வுகளில் இவரைக் காணலாம். எளிமையான தோற்றம் கொண்ட இவர், பழகுவதற்கு இனிய நண்பர்.

இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களும் உள்ளன. ஒரு பாலியலாளர்களுக்கு எதிரானவர். கருக்கலைப்பின் கடுமையான விமர்சகர். The Hill Times  என்ற பத்திரிகை 2002ம் ஆண்டு நடாத்திய ஒரு ஆய்வில், அப்போதைய கனடிய பாராளுமன்றத்தில் மிகவும் சோம்பலான பா.உ ஆக இவரை தேர்வு செய்தது. in 2002, Karygiannis was voted “laziest MP” in a poll of Parliamentary staffers by The Hill Times..

இவர் Co-Op Cab company  நிர்வாக இயக்குனரின் நெருங்கிய நண்பர். இதனால்  Uber கடுமையாக எதிர்த்தார். ரக்சி நிறுவனங்கள் இவருக்கு பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளன என்ற குற்றச்சாட்டும் இவர் மீது வைக்கப்பட்டிருந்தது.

எது எப்படியிருப்பினும் எமது நண்பனை நாம் இழந்துள்ளோம். அவர் மீண்டும் ரொரன்ரோ மாநகரசபையின் கவுன்சிலாராவர் என்ற நம்பிக்கை எமக்குண்டு.